Published : 25 Feb 2025 07:02 AM
Last Updated : 25 Feb 2025 07:02 AM

சென்னை | ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்​கில் வணிக வரி அதிகாரிகள் 2 பேர் கைது

சென்னை: ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்​கில் காவல் மற்றும் வருமான வரித்​துறையை தொடர்ந்து வணிக வரித்​துறை அதிகாரிகள் 2 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

சென்னை வண்ணாரப்​பேட்​டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் 2 மாதங்களுக்கு முன்பு ரூ.20 லட்சத்தை மிரட்டி பறித்த வழக்​கில் திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் சிறப்பு எஸ்ஐ-யாக பணியாற்றிய ராஜாசிங், வருமானவரித் துறை அதிகாரி தாமோதரன், ஊழியர்கள் பிரதீப், பிரபு ஆகிய 4 பேர் அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்​டனர்.

விசா​ரணை​யில் இந்த வழிப்​பறிக்கு சைதாப்​பேட்டை காவல் நிலை​யத்​தில் சட்டம்​-ஒழுங்கு பிரி​வில் சிறப்பு எஸ்ஐ-யாக பணியாற்றிய சன்னி லாயிடு மூளையாக செயல்​பட்டது தெரிய​வந்​தது. இதையடுத்து உத்த​ராகண்ட் மாநிலம் டேராடூனில் பதுங்கி​யிருந்த அவரை திரு​வல்​லிக்​கேணி தனிப்படை போலீ​ஸார் அண்மை​யில் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

இவர்கள் ஆயிரம் விளக்கு உட்பட பல்வேறு பகுதி​களில் கூட்டு சேர்ந்து வழிப்பறி செய்து வந்ததும், அதன் மூலம் கிடைத்த பணத்தை பங்கிட்டு சொத்துகளை வாங்கி குவித்​ததோடு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரிய​வந்​தது. குறிப்​பாக, ஹவாலா பணம் கைமாறுவதை நோட்​ட​மிட்டு வழிப்பறி செய்து வந்தது தெரிய​வந்​தது. இவர்​களது கூட்​டாளிகள் வேறு யாரேனும் உள்ளனரா என போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வந்தனர்.

இந்நிலை​யில், இந்த வழக்கு தொடர்பாக வணிகவரித் ​துறை அதிகாரிகள் சுரேஷ் மற்றும் பாபு ஆகிய இரு​வர் கைது செய்யப்பட்டுள்​ளனர். அவர்​களிடம் போலீ​ஸார் தொடர்ந்து ​விசா​ரித்து வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x