Published : 15 Feb 2025 06:48 AM
Last Updated : 15 Feb 2025 06:48 AM

கல்பாக்கம் | சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

கல்பாக்கம்: செங்​கல்​பட்டு மாவட்​டம், கல்பாக்கம் இந்திரா​காந்தி அணு ஆராய்ச்சி மையத்​தில் கண்காணிப்​பாளராக பணிபுரிந்து வந்தவர் கருப்​பசாமி (48). கல்பாக்​கத்தை அடுத்த அணுபுரம் நகரி​யத்​தின் அடுக்​கு​மாடி குடி​யிருப்பு பகுதி​யில் குடும்பத்​துடன் வசித்து வருகிறார்.

அடுக்கு மாடி​யின் லிப்​டில் பயணிக்​கும் சிறுமிகள், அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் உள்ள குழந்தை​களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்​படு​கிறது. மேலும், உடன் பணியாற்றும் சக ஊழியர்​களின் குழந்தை​களிட​மும் பூங்கா, வணிக வளாகம் போன்ற பகுதி​களில் விளை​யாடும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த​தாக​வும் கூறப்​படு​கிறது. இந்நிலை​யில், பாதிக்​கப்​பட்ட சிறுமிகள் பெற்​றோரிடம் கூறியதன் பேரில், அவர்கள் கருப்​பசாமியை கடந்த ஜனவரி மாதம் தாக்​கியதாக கூறப்​படு​கிறது.

தாக்​குதலுக்கு உள்ளான கருப்​பசாமி அங்கிருந்து தலைமறைவு ஆகியுள்​ளார். இதையடுத்து, அப்பகுதி குடி​யிருப்புவாசிகள் 3 பேர் சதுரங்​கபட்​டினம் காவல் நிலை​யத்​தில், கருப்​பசாமி​யின் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளித்​துள்ளனர். இதன்​பேரில், போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து ரகசி​யமாக அவரை கண்காணித்து தேடி வந்தனர். இந்நிலை​யில், மேற்​கண்ட நபர் சொந்த ஊரான தேனி மாவட்​டம், ஆண்டிப்​பட்டி பகுதி​யில் பதுங்கி இருப்பது தெரிய​வந்​தது.

அப்பகு​திக்கு விரைந்து சென்ற போலீ​ஸார், அவரை கைது செய்​தனர். மேலும், சதுரங்​கபட்​டினம் காவல் நிலை​யத்​துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்​தினர். பாதிக்​கப்​பட்ட குழந்தை​களும் பாலியல் சீண்​டலுக்கு ஆளானதாக மாமல்​லபுரம் மகளிர் காவல் நிலை​யத்​தில் வாக்​குமூலம் கொடுத்​ததாக கூறப்​படு​கிறது. இதனால், மாமல்​லபுரம் அனைத்து மகளிர் போலீ​ஸார் கருப்​பசாமி மீது ​போக்சோ வழக்கு ப​திவு செய்து, ​திருக்​கழுகுன்​றம் நீ​தி​மன்​றத்​தில்​ ஆஜர்​படுத்​தி, செங்​கல்​பட்​டு சிறை​யில்​ அடைத்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x