Published : 06 Jan 2025 07:46 AM
Last Updated : 06 Jan 2025 07:46 AM

சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் ஞானசேகரனிடம் தீவிர விசாரணை

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்​கில் கைதான ஞானசேகரனிடம் போலீ​ஸார் விசாரணை மேற் ​கொண்​டுள்​ளனர்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை நீதி​மன்​றத்​தால் நியமிக்​கப்​பட்ட சிறப்பு புலனாய்வு குழு​வினர் விசா​ரிக்கின்​றனர். 10-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் கோட்​டூர்​புரம் லேக் வியூ பகுதி​யில் உள்ள ஞானசேகரனின் வீட்​டில் நேற்று முன்​தினம் சோதனை மேற்​கொண்​டு லேப்​டாப், ஹார்டு டிஸ்க், பெண் டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்​தனர்.

ஏற்கெனவே, பாதிப்​புக்கு உள்ளான மாணவி மற்றும் சம்பவம் நடைபெற்​றதாக கூறப்​படும் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்​கள், பணியாளர்​கள், நிர்​வாகி​களிடம் விசாரணை நடத்தி வாக்​குமூலம் பெறப்​பட்​டிருந்​தது. இந்நிலை​யில், ஞானசேகரனிட​மும் சிறப்பு புலனாய்​வுக் குழு விசாரணை மேற்​கொண்​டது.

ஞானசேகரன் போலீ​ஸாரின் பிடியி​லிருந்து தப்பி ஓட முயன்​ற​ போது அவரது ஒரு கால், கையில் முறிவு ஏற்பட்​டதாக கூறி அவரை போலீ​ஸார் ஸ்டான்லி அரசு மருத்​துவ​மனை​யில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்​றனர். தற்போது, போலீஸ் பாது​காப்புடன் அங்கேயே அவருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வருகிறது. அங்கு அவரிடம் பாலியல் வன்கொடுமை வழக்​கில் வேறு யாருக்​கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசா​ரித்​துள்ளனர்.

மேலும் ஞானசேகரன், ‘சார்’ ஒருவருடன் தனிமை​யில் இருக்க வேண்​டும் எனக்​கூறி மாணவியை மிரட்டி இருந்​ததாக தகவல் வெளி​யாகி இருந்​தது. அந்த ‘சார்’ யார் என்றும் போலீ​ஸார் விசாரணை மேற்​கொண்​டனர். மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பல்​வேறு கோணங்​களில் சிறப்பு புலனாய்​வுக் குழு ​போலீ​ஸார் தொடர்ந்​து விசா​ரித்​து வரு​கின்​றனர்​ என்​ப​து குறிப்​பிடத்​தக்​கது.

குண்டர் சட்டத்தில் சிறை: இதற்​கிடை​யில், சிறப்பு புலனாய்வு குழு​வின் பரிந்​துரையை ஏற்று மாணவி பாலியல் வன்கொடுமை வழக்​கில் கைது செய்​யப்​பட்ட ஞானசேகரனை குண்டர் சட்டத்​தில் சிறை​யில் அடைத்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்​பித்​துள்ளார். ஞானசேகரன் இதோடு 4-வது முறையாக குண்டர் சட்டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார் என்பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x