Published : 02 Jan 2025 01:00 AM
Last Updated : 02 Jan 2025 01:00 AM

1 லிட்டர் ரசாயனத்தில் 500 லிட்டர் பால் உற்பத்தி: 20 ஆண்டுகளாக மோசடி செய்த வியாபாரி கைது

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாகரை சேர்ந்தவர் அஜய் அகர்வால். இவர், 'அகர்வால் டிரேடர்ஸ்' என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்து வந்துள்ளார். இவரது கடை மற்றும் குடோன்களில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணைய (ஃபாசி) அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர்.

இதில் அஜய் அகர்வால், ஆபத்தான ரசாயனங்களை பயன்படுத்தி போலி பால் மற்றும் பன்னீர் தயாரித்து வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் இவற்றை அவர் சுமார் 20 ஆண்டுகளாக விற்பனை செய்து வந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, "போலி பால் தயாரிக்க பயன்படுத்திய ரசாயனங்களை அஜ்ய் அகர்வால் இன்னும் தெரிவிக்கவில்லை. என்றாலும் 2 லிட்டர் போலி பால் தயாரிக்க அவருக்கு 5 மிலி ரசாயனமே போதுமானதாக இருந்தது, இந்த வகையில் அவர் 1 லிட்டர் ரசாயனத்தில் 500 லிட்டர் போலி பால் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். போலி பாலை வேறுபடுத்தி பார்க்க முடியாத வகையில் அதில் செயற்கை மணம் மற்றும் சுவையூட்டிகளை அஜய் அகர்வால் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் பாலின் மீது மக்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. இதேபோல் அவர் பன்னீரும் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார்" என்று தெரிவித்தனர்.

இந்த மோசடி தொடர்பாக அஜய் அகர்வாலை கைது செய்த அதிகாரிகள் அவரது குடோன்களில் இருந்த காஷ்டிக் பொட்டாஷ், உள்ளிட்ட ரசாயனங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சோயா கொழுப்பை பறிமுதல் செய்தனர்.

போலி பால் மற்றும் பன்னீர் தயாரிக்கப்பட்ட ஃபார்முலா குறித்து அஜய் அ்கர்வால் மற்றும் அவரது ஆட்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் கடந்த 6 மாதங்களில் இவற்றை யாருக்கெல்லாம் இவர்கள் விநியோகம் செய்துள்ளனர் என்பதை அறிய முயன்று வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட பாதி பால் உற்பத்தியாளர்கள் அமைப்புசாரா துறைக்குள் வருகின்றனர். ஒட்டுமொத்த பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதற்கான சோதனைகள் சவால் மிக்கதாக உள்ளது. இதனால் கலப்படமும் அதிகமாக உள்ளது.

ஒரு நிமிடத்​தில் கலப்​படத்தை கண்டு​பிடிக்​கலாம்: இதுகுறித்து ஆவின் நிறுவன தரக்​கட்டுப்​பாடு அதிகாரி ஒருவர் கூறிய​தாவது; பாலில் கலப்​படத்தை பொது​மக்கள் முழு​மையாக கண்டு​பிடிக்க முடி​யாது. ஆனால் பாலை காய்ச்​சும்​போது அதன் நிறம், நறுமணத்தை வைத்து ஓரளவு உணர முடி​யும். இதுதவிர, பாலின் சுவையை வைத்​தும் உணரலாம்.

அதேநேரத்​தில், ஆய்வகத்​தில் பாலின் கலப்​படத்தை துல்​லியமாக கண்டு​பிடிக்க முடி​யும். ஆய்வகத்​தில் பால் கலப்​படத்தை கண்டு​பிடிக்க 18 வகையான பரிசோதனைகள் உள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தி, 16 வகையான கலப்​படங்களை கண்டு​பிடிக்க முடி​யும்.

பாலில் தண்ணீரை கலக்க முடி​யும். மரவள்​ளி​கிழங்கு, கஞ்சி, சர்க்​கரை, உப்பு, யூரியா ஆகிய​வற்றை கலப்​படம் செய்ய முடி​யும். பால் கெட்டுப்​போ​காமல் இருக்க சோடியம் பை கார்​பனேட் என்ற ரசாயனம் சேர்க்​கப்​படு​கிறது. இதுவும் ஒரு வகை கலப்​படமே. பாலில் என்ன கலப்​படம் செய்​தா​லும் அதனை ஆய்வத்​தில் ஒரு நிமிடத்​தில் கண்டு​பிடிக்க முடி​யும். அதற்கான நவீன பரிசோதனை கருவிகள் உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.

சிறுநீரகம், கல்லீரல் பாதிக்​கும்: மருத்​துவர் மு.அகிலன் கூறுகை​யில், “ரசாயனம் கலந்த பால், பால் பொருட்களை குழந்தை​கள், பெரிய​வர்கள் எடுக்​கும்​போது குடல், இரைப்பை பாதிக்​கப்​படும். இவை செரி​மானம் ஆவதில் சிரமம் ஏற்படும். இதனால், வயிற்று​வலி, வாந்தி ஏற்படும்.
எந்தவொரு ரசாயனம் வயிற்றுக்​குள் போனாலும் சிறுநீரகம், கல்லீரல் வழியாக அது வெளி​யேறும். இதை தொடர்ந்து உட்​கொண்​டால், சிறுநீரகம் மற்றும் கல்​லீரல் பா​திக்​கும். உடல் உறுப்பு​கள் பழுதாக வாய்ப்புள்​ளது” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x