Published : 25 Dec 2024 06:12 AM
Last Updated : 25 Dec 2024 06:12 AM

பாரிமுனையில் பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி வசூல் பணத்தை வழிப்பறி செய்த 3 பேர் கைது

இளைஞரிடம் கத்தி முனையில் பண பையை பறித்து தப்பியதாக கைது செய்யப்பட்டவர்கள்.

சென்னை: மதுர​வாயல், புதிய சுப்​ரமணியம் நகர் பகுதி​யில் வசித்து வருபவர் ஹரிபிரசாத் (30). பாரி​முனை​யில் உள்ள மூலிகை (ஹெர்​பல்) பொருட்கள் விற்பனை செய்​யும் கடையில் பணம் வசூல் செய்​யும் வேலை செய்து வருகிறார். வழக்​கம்​போல், இவர் கடந்த 14-ம் தேதி மாலை, கடைகளில் வசூல் செய்த பணத்​துடன் இருசக்கர வாகனத்​தில் பாரி​முனை, வெங்​கடாச்சல முதலி தெரு வழியாக சென்று கொண்​டிருந்​தார்.

அப்போது, அவரை பின் தொடர்ந்து 2 இருசக்கர வாகனங்​களில் வந்த 4 கொள்​ளை​யர்கள் ஹரிபிரசாத்தை மறித்து, கத்தி​யைக் காட்டி மிரட்டி அவர் வைத்​திருந்த பணப்​பையை பறித்​துத் தப்பினர். இதுதொடர்பான வீடியோ, சமீபத்​தில் சமூக வலைதளங்​களில் பரவி வைரலானது. ஹரிபிரசாத் அளித்த புகாரின்பேரில் பூக்கடை காவல் நிலைய போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

சம்பவ இடத்​தில் பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேமரா பதிவு​களைக் கைப்​பற்றி ஆய்வு செய்​தனர். அதன் அடிப்​படை​யில் மாதவரம் பால்​பண்ணை பகுதி​யைச் சேர்ந்த இதயகண்ணன் (21), மணலி சின்ன சேக்​காட்​டைச் சேர்ந்த மகேஷ் (22), மணலி ஜாகிர் உசேன் 2-வது தெருவைச் சேர்ந்த நரேஷ் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்​களிட​மிருந்து லட்சக்​கணக்கான பணத்​துடன் இருந்த பணப்பை, குற்றச் செயலுக்கு பயன்​படுத்திய 2 இருசக்கர வாகனங்​கள், 2 செல்​போன்கள் மற்றும் கத்தி பறிமுதல் செய்​யப்​பட்டன. விசா​ரணை​யில் கைதான நரேஷ், மகேஷ் ஆகியோர் மீது ஏற்கெனவே தலா ஒரு குற்ற வழக்கு உள்ளது தெரிய​வந்​தது. மேலும், இவ்வழக்​கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்​றவாளியை தனிப்படை போலீ​ஸார் தொடர்ந்து தேடி வரு​கின்​றனர். கைது செய்​யப்​பட்ட 3 பேரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x