Published : 18 Nov 2024 06:22 AM
Last Updated : 18 Nov 2024 06:22 AM

சிறுவாபுரியில் பக்தரை தாக்கிய வியாபாரிகள்: வைரலாகும் வீடியோ காட்சிகள்

பொன்னேரி: திரு​வள்​ளூர் மாவட்​டம், பொன்னேரி அருகே சிறு​வாபுரி​யில் பாலசுப்​பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயி​லில் வாரத்​தின் அனைத்து நாட்​களி​லும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து திரும்​பு​கின்​றனர். சிறு​வாபுரி முருகன் கோயில் வாசல் மற்றும் அதனையொட்டிய பகுதி​களில், பூஜைப் பொருட்கள், உள்ளிட்​ட​வற்றை விற்பனை செய்யும் 50-க்​கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் பக்தர்கள் மற்றும் உள்ளூர்​வாசிகளுக்​கும் போக்கு​வரத்​துக்​கும் இடையூறாக உள்ளன.

இந்நிலை​யில், நேற்று முன்​தினம் மாலை சிறு​வாபுரி முருகன் கோயிலுக்கு வந்த தம்பதி, கோயில் வாசலில் உள்ள நடைபாதை கடைகளில் ஒன்றில் பூஜைப் பொருட்கள் வாங்​கிய​போது, பொருட்​களின் விலையை அக்கடைக்​காரர் அதிகமாக சொன்னதாக கூறப்​படு​கிறது. இதனால், சாலையோர வியாபாரிக்​கும், தம்ப​திக்​கும் இடையே ஏற்பட்ட வாக்கு​வாதம் முற்றியது. இதன் விளைவாக நடைபாதை வியாபாரிகள் அந்த தம்ப​தியை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியுள்​ளனர்.

இச்சம்​பவம் குறித்து, பக்தர்கள் சிலர், அங்கு பாது​காப்புப் பணியில் இருந்த போலீ​ஸாரிடம் தெரி​வித்​தனர். இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த போலீ​ஸார், தம்ப​தியை நடைபாதை வியாபாரி​களிடம் இருந்து மீட்டு, அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்​தனர். இந்த தாக்​குதல் காட்​சிகள் அடங்கிய வீடியோ, சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது. இத்​தாக்​குதல் சம்​பவம் குறித்து ஆரணி ​போலீ​ஸார் ​விசா​ரித்து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x