Published : 17 Oct 2024 05:45 AM
Last Updated : 17 Oct 2024 05:45 AM

காளையார்கோவிலில் லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி தலைவர், கணவர் உட்பட 3 பேர் கைது

ஜோஸ்பின் மேரி, அருள்ராஜ், குமார்

சிவகங்கை: காளையார்கோவிலில் லஞ்சம் வாங்கியதாக பெண் ஊராட்சித் தலைவர், அவரது கணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சித் தலைவராக இருப்பவர் ஜோஸ்பின் மேரி. இவரது கணவர் அருள்ராஜ். காளையார்கோவில் எஸ்.எஸ்.நகரைச் சேர்ந்த காளீஸ்வரன் (46), அப்பகுதியில் புதிதாக வீடு கட்டினார். அந்த வீட்டுக்கான சொத்துவரி ரசீது பெறுவதற்காக ஊராட்சி தலைவரின் கணவர் அருள்ராஜை அவர் அணுகியுள்ளார்.

ரூ.5,000 லஞ்சம்: வரி ரசீதை தருவதற்கு ரூ.5,000லஞ்சம் கேட்டுள்ளார் அருள்ராஜ். லஞ்சம் தர விரும்பாத காளீஸ்வரன்,இதுகுறித்து ஊராட்சித் தலைவர் ஜோஸ்பின் மேரியிடம் புகார் தெரிவித்தார். அவர், தனது கணவர் கேட்கும் பணத்தை தருமாறு கூறினாராம்.

இதையடுத்து, சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் காளீஸ்வரன் புகார் செய்தார். அவர்களது ஆலோசனையின்படி, ரசாயனப் பொடி தடவிய பணத்தை ஊராட்சி அலுவலகத்தில் இருந்தஅருள்ராஜிடம் நேற்று காளீஸ்வரன் அளித்தார். அதை தனது உதவியாளர் குமாரிடம் தருமாறு அருள்ராஜ் கூறியுள்ளார்.

அவரிடம் பணத்தை கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பிஜான்பிரிட்டோ, ஆய்வாளர்கள் கண்ணன், ஜேசுதாஸ் மற்றும் போலீஸார் அருள்ராஜ், குமார் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், வேறொரு நிகழ்ச்சியில் இருந்த ஜோஸ்பின் மேரியையும் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x