Published : 28 Sep 2024 05:24 AM
Last Updated : 28 Sep 2024 05:24 AM

புதுக்கோட்டை விவசாயி கொலை வழக்கில் 3 பெண்கள் உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை

புதுக்கோட்டை: அரிமளம் அருகே விவசாயி கொலை வழக்கில் 3 பெண்கள் உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அரி மளம் அருகேயுள்ள ஆணைவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி(65). அதே ஊரைச் சேர்ந்தவர் சு.பூசையா(45). அங்குள்ள அடிச்சிஅம்மன் கோயிலை யார் முன்னின்றுகட்டுவது என்பது தொடர்பாக இவர்களிடையே தகராறு இருந்தது. மேலும், காந்திக்கு சொந்தமான இடத்தில் குடிநீர் விநியோகத்துக் காக அமைக்கப்பட்ட மின் மோட் டாரை தனது விருப்பத்துக்கு ஏற்பபயன்படுத்தி வந்த பூசையா, பொதுப்பாதையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஜல்லிக் கற்களையும் கொட்டி வைத்திருந்தாராம். இதனால், இரு குடும்பத்துக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

2019 மார்ச் 17-ல் காந்தி, அவரது மனைவி முத்து, மகன் ராமையா,அதே ஊரைச் சேர்ந்த உறவினர் விவசாயி அன்பில்முத்து(46) ஆகியோர் காந்தியின் வீட்டருகே இருந்துள்ளனர். அப்போது, அங்கு சென்றபூசையா மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்டோர், காந்தி, ராமையா மற்றும் அன்பில்முத்து ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த 3 பேரும்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அன்பில்முத்து உயிரிழந்தார்.

இது தொடர்பாக அரிமளம் போலீஸார் விசாரணை நடத்தி, பூசையா,அவரது சகோதரர்கள் சக்திவேல்(42), ஆறுமுகம்(40), பூசையா மனைவி சித்ரா(42), அழகுமனைவி பாண்டி உஷா(29), சுப்பிரமணியன் மனைவி வசந்தா(64) மற்றும் கடியாபட்டி யுவராஜன்(27)ஆகிய 7 பேரை கைது செய்தனர்.இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதில், குற்றம் சுமத்தப்பட்ட 7 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாபுலால் நேற்று தீர்ப்பளித்தார். இந்தவழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x