Published : 17 Sep 2024 06:54 AM
Last Updated : 17 Sep 2024 06:54 AM

தாம்பரத்தில் பறிமுதலான ரூ.4 கோடி கேன்டீன் உரிமையாளருக்கு சொந்தமான பணமில்லை: சிபிசிஐடி விசாரணையில் தகவல்

சென்னை: மக்களவைத் தேர்தலின்போது, நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்துக்கு எந்தவிதமான ஆவணங்களும் இல்லை. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்ததோடு, அதை கொண்டு வந்த 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாஜகவின் திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என வாக்குமூலம் அளித்தனர். ஆனால், நயினார் நாகேந்திரன் இதை திட்டவட்டமாக மறுத்தார். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. நயினார் நாகேந்திரன் உட்பட சுமார் 15 பேரை சிபிசிஐடி போலீஸார் அடுத்தடுத்து அழைத்து விசாரித்தனர்.

இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு ரயில்வே கேன்டீன் உரிமையாளர் ஒருவர் ரூ.4 கோடி பணம் தன்னுடையது என உரிமை கோரி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் 10 மணி நேரம்சிபிசிஐடி போலீஸார் விசாரணைநடத்தினர். இந்த பணம் எப்படிஉங்களுக்கு வந்தது, பணத்தையாரிடம் கொடுத்து அனுப்பினீர்கள், எந்த காரணத்துக்காக இவ்வளவு பணத்தை மொத்தமாக கொடுத்து அனுப்பினீர்கள் என பல்வேறு கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்தனர்.

முஸ்தபாவிடம் நடத்திய விசாரணையில் ரயிலில் கொண்டுசெல்லப்பட்ட பணம் அவருடையபணம் இல்லை என தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முஸ்தபா இவ்வாறு சொல்ல காரணம் என்ன, அதன் பின்னணி என்ன என்பது உட்பட பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x