Published : 14 Sep 2024 06:06 AM
Last Updated : 14 Sep 2024 06:06 AM

சென்னையில் கடந்த 8 மாதங்களில் 1,679 சைபர் குற்ற புகார்கள்: பொதுமக்களுக்கு ரூ.189 கோடி இழப்பு

சென்னை: சைபர் குற்றங்கள் தொடர்பாக சென்னையில் கடந்த 8 மாதங்களில் 1,679 புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.189 கோடிகளை பொதுமக்கள் இழந்துள்ளனர். எனவே, சைபர் குற்றவாளிகளிடம் சிக்கிக் கொள்ளாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல் ஆணையர் அறிவுரை வழங்கி உள்ளார்.

வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வந்த நிலையில், தற்போது இருந்த இடத்திலிருந்தே வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கி லிருந்து மொத்த பணத்தையும் திருடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னையில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக 1,679 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1,589 வழக்குகள் நிதி இழப்பு தொடர்பான சைபர் குற்றங்கள் ஆகும்.

இவற்றில் பல்வேறு மோசடி களில் சுமார் ரூ.189 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அவை ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி, பெடக்ஸ் கூரியர் மோசடி, ஸ்கைப் மோசடிகள், போலீஸ் அதிகாரி பெயரில் மோசடி, ஆன்லைன் பகுதிநேர வேலை மோசடி,திருமண மோசடி, பரிசு மோசடி என மோசடிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இதுபோன்ற மோசடி வாயிலாக பொதுமக்கள் ஏமாறுவதைத் தடுக்கவும், மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சைபர் கிரைம் போலீஸாருக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும், சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை விசாரிப்பது தொடர்பாக அப்பிரிவு போலீஸாருக்கு வழிகாட்டுதல்களையும் வழங்கிஉள்ளார்.

மேலும், பொதுமக்கள் அதிக லாபம் தரும் முதலீட்டு விளம்பரங்கள், போலியான முதலீட்டு செயலிகள், வலைதளங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறியாத வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்த வேண்டாம்.

சைபர்குற்றங்கள் மூலம் பாதிக்கப்பட்டால் சைபர் குற்றங்களுக்கான ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உடனடி யாக புகார் அளிக்க வேண்டும். தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களிலும் புகார் தெரிவிக்கலாம் என காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x