Published : 20 Jul 2024 05:59 AM
Last Updated : 20 Jul 2024 05:59 AM

5 மாநிலங்களில் சிறுநீரக மோசடி வங்கதேசத்தினர் உட்பட 7 பேர் கைது

புதுடெல்லி: ஐந்து மாநிலங்களில் சிறுநீரக மோசடியில் ஈடுபட்டதாக வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, மத்தியபிரதேசம், குஜராத் ஆகிய 5 மாநிலங்களில் ஒரு கும்பல் சிறுநீரக மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தனிப்படை அமைத்து டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட மொத்தம் 7 பேரை டெல்லி போலீஸார் அண்மையில் கைது செய்தனர். அவர்கள் அதிக பணம் தருவதாக கூறி வங்கதேசத்தில் ஆதரவற்றவர்களாக சுற்றித் திரிபவர்களை அழைத்து வந்து அவர்களிடமிருந்து சிறுநீரகத்தைப் பெற்று அதை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து செல்போன், லேப்-டாப்கள், சிம் கார்டுகள், ரொக்கம், குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். வேலை தருவதாகவும், சிறுநீரகத்தை பெற்று அதிக விலைதருவதாகவும் கூறி ஆதரவற்றவர்களை அழைத்து வந்துள்ளனர். சிறுநீரகத்தை பெற்ற பின்னர் அவர்களுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.5லட்சம் வரை தந்துள்ளனர். ஆனால்அவற்றை தேவை உள்ளவர்களுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் டாக்டர் விஜயகுமாரி என்பவரும் ஒருவர் ஆவார். அவர்நொய்டாவிலுள்ள மருத்துவமனையில் இதுபோன்ற சட்டவிரோத ஆபரேஷன்களை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மொத்தம் அங்கு 16 சட்டவிரோத ஆபரேஷன்களை செய்துள்ளார்.

டெல்லியில் வங்கதேசத்தைச் சேர்ந்த நபர்கள் சிறுநீரக மோசடியில் ஈடுபடுவதாக வந்த தகவலைஅடுத்து ஜசோலா விஹார் பகுதியில் போலீஸார் சோதனையிட்டு அவர்களைக் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x