Published : 10 Jul 2024 06:01 AM
Last Updated : 10 Jul 2024 06:01 AM

பரிசு புள்ளி என அறிவித்து எஸ்பிஐ பெயரில் புது மோசடி: சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கை

சென்னை: சமீபகாலமாக சைபர் க்ரைம் மோசடிக்காரர்கள் புதிய வகை மோசடி யுக்தியை கையாண்டு வருகின்றனர். அதன்படி, முதல் கட்டமாக தனி நபர்களின் செல்போன்களை அவர்களுக்கே தெரியாமல் ஹேக் செய்கின்றனர். பின்னர், போலியான வாட்ஸ்அப் அக்கவுண்டை பயன்படுத்தி, பல்வேறு அதிகாரப்பூர்வ மற்றும் தனிப்பட்ட வாட்ஸ்அப் குரூப்களில் எஸ்பிஐ பரிசு புள்ளிகள் பற்றிய பொய் செய்தியை அனுப்புகின்றனர். இந்த குரூப்களின் ஐக்கான்கள் மற்றும் பெயர்களையும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எனவும் மாற்றுகிறார்கள்.

இந்த பொய்யான செய்திகளில்,வங்கி விவரங்களை அப்டேட் செய்து எஸ்பிஐ பரிசு புள்ளிகளைபெறுங்கள் என அறிவுறுத்துகின்றனர். இதனை நம்பி விவரங்களை அளிப்போரின் செல்போன் எண்தொடர்பு உடனடியாக துண்டிக்கப்படும். பின்னர், ஏற்கெனவே சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்த வங்கிகணக்கில் விவரங்களை பயன்படுத்தி வங்கி கணக்கில் உள்ளபணம் முழுவதையும் எடுத்துமோசடி செய்து விடுவார்கள்.

இப்படி கடந்த 2 மாதங்களில்மட்டும் தமிழகம் முழுவதும் பலரிடம் மோசடி நடைபெற்றுள்ளது. இதில், 73 பேர் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் உஷாராக இருக்கும்படி சைபர்க்ரைம் போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து தமிழக காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்:

இதுபோன்ற மோசடிகளில்இருந்து தப்பிக்க சமூக ஊடக கணக்குகளில் தேவையான சரிபார்ப்பை செயல்படுத்தி, கூடுதல்பாதுகாப்பை சேர்க்க வேண்டும்.இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்களின் செல்போனுக்கு அனுப்பப்படும் ஓடிபிக்கு கூடுதல் பாதுகாப்பை தரும். சந்தேக இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். கடவுச் சொற்களை அவ்வப்போது மாற்றுங்கள். பல கணக்குகளுக்கு ஒரே கடவுச் சொற்களை பயன்படுத்த வேண்டாம். உங்கள் வங்கி விவரங்களை சந்தேகத்துக்குரிய தளத்தில் பதிவிட்டு இருந்தால் உங்கள் வங்கியை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

இதுபோல் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக சைபர் க்ரைம்தொலைபேசி உதவி எண் 1930-ஐஅழைக்கவும். அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x