Last Updated : 30 May, 2024 10:05 AM

1  

Published : 30 May 2024 10:05 AM
Last Updated : 30 May 2024 10:05 AM

செல்போன் பேசியபடி காரை வேகமாக ஓட்டிய டிடிஎப் வாசன்: மதுரை போலீஸார் வழக்கு

டிடிஎப் வாசன் | கோப்புப் படம்.

மதுரை: மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் செல்போனில் பேசியபடி காரை அஜாக்கிராதையாக ஓட்டியதாக பைக் ரேஸர் மற்றும் யூடியூபரான டிடிஎப் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டிடிஎப் வாசனுக்கு வழக்கு ஒன்றில் 10 ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் டிடிஎப் வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக சுற்றிவருகிறார். அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு வண்டியூர் டோல்கேட் பகுதியில் TN 40 AD 1101 என்ற காரை அஜாக்கிரதையாகவும் கவனக் குறைவாகவும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசிக் கொண்டே ஓட்டியுள்ளார். மேலும், அச்செயலை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவு செய்து Twin Throttlers என்ற ID ல் YOUTUBE சேனலில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து மதுரை மாநகர ஆயுதப்படை சார்பு ஆய்வாளரான சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி என்பவர் அளித்த புகாரின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் பைக் ரேஸரான டிடிஎப் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே பைக் ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் போது காரில் பேசியபடி ஆபத்தை விளைவிக்கும் வகையில் காரை இயக்கியதாக டிடிப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x