Published : 12 May 2024 07:43 AM
Last Updated : 12 May 2024 07:43 AM

மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

தற்கொலை செய்துகொண்ட மோகன் மற்றும் கொலை செய்யப்பட்ட அவரது குழந்தைகள் தேஜஸ், சாய் ஸ்வாதி

சென்னை: மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் 2 குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் மோகன்(52). பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவியமுனா(32). அதே பகுதியில் உள்ளஅச்சகத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சாய் ஸ்வாதி(13) என்ற மகளும், தேஜஸ்(5) என்றமகனும் உள்ளனர். இருவரும் அப்பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் படித்து வந்தனர்.

இந்நிலையில் யமுனாவுக்கு வேறு ஒரு நபருடன் உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், சில ஆண்டுகள் மோகன் தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்துள்ளார். பின்னர், குடும்பத்தினர் இருவரிடம் பேசி சமரசம்செய்து வைத்தனர். ஆனாலும், யமுனா, அந்த நபருடன் உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மோகன்மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம்யமுனா வேலைக்கு சென்றுவிட்டுவீட்டுக்கு வந்தபோது, வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளேசென்று பார்த்தபோது, சாய் ஸ்வாதிகழுத்து அறுக்கப்பட்டும், தேஜஸ் கழுத்து நெரிக்கப்பட்டும் உயிரிழந்து கிடந்தனர். மேலும், மோகனும்தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தகவல் அறிந்து வந்த குமரன் நகர் போலீஸார் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

முதற்கட்ட விசாரணையில் கணவன், மனைவி இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டதும், இதனால் ஆத்திரமடைந்த மோகன் தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x