Published : 09 May 2024 05:22 AM
Last Updated : 09 May 2024 05:22 AM

வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேரிடம் சென்னையில் குரல் மாதிரி பரிசோதனை

கோப்புப் படம்

சென்னை: வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக சென்னையில் 3 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை நேற்று நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், 2 பெண் உட்பட3 பேரை குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் தரப்பில்மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 3 பேரையும் குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தலாம் என நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் (டிஜிபி அலுவலகம் அருகே) உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் இதற்கான சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. திட்டமிட்டபடி 3 பேருக்கும் நேற்று காலைதனித்தனியாக குரல் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு வெளியாகும்பட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த விவகாரத்தில் துப்பு துலுங்கும் என சிபிசிஐடி போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சம்பந்தப்பட்ட 3 பேரையும் விதவிதமாக பேசச் சொல்லி குரல் மாதிரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குரலிலும் ஒவ்வொரு ஒலி மற்றும் உச்சரிப்பு வேறுபாடுஇருக்கும். இதை அறிவியல்பூர்வமாக தடய அறிவியல் துறையினர் கண்டறிவார்கள். இதன்முடிவு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x