Published : 17 Mar 2024 05:45 AM
Last Updated : 17 Mar 2024 05:45 AM

குழந்தை கடத்தப்பட்டதாக வதந்தி பரப்பிய பெண் கைது @ சிங்கம்புணரி

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதியில் குழந்தை கடத்தப்பட்டதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் குழந்தை கடத்தப்பட்டதாக சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது. இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்பேரில், எஸ்.வி.மங்கலம் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் இது வதந்தி என்றும், இந்த வதந்தியைப் பரப்பியது நெற்குப்பை அருகேஉள்ள ஒழுகமங்கலத்தைச் சேர்ந்த ஆனந்தவள்ளி(45) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ஆனந்த வள்ளி மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரை நேற்று கைது செய்தனர்.மேலும், சமூகவலைதளங்களில் குழந்தை கடத்தப்பட்டதாக, உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x