Published : 12 Mar 2024 06:10 AM
Last Updated : 12 Mar 2024 06:10 AM

நாகர்கோவில் | தொழிலாளி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை: நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், அண்ணன், தம்பி உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பூதப்பாண்டி ஆருகேயுள்ள திட்டுவிளையைச் சேர்ந்த நேசமணி என்பவரது மகன் முத்துராஜ் (34). தொழிலாளி. இவரது பெரியப்பா ஞானசிகாமணியின் மகன்கள் செல்வன்(33), செல்வசிங்(32).

சொத்து தகராறில் முன்விரோதம்: நேசமணிக்கும், ஞானசிகாமணிக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், 2005 ஆகஸ்ட் மாதம் 28-ம்தேதி, சொத்து தொடர்பாக அவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது முத்துராஜ்தனது பெரியப்பா ஞானசிகாமணியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மறுநாள் முத்துராஜ் தனது தோட்டப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். முக்கடல்ஆசிரமம் அருகே வந்தபோது, செல்வன், செல்வசிங் மற்றும்அவர்களது நண்பர்கள் வாழையத்து வையலைச் சேர்ந்த சுரேஷ்(32), அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்த ரஷீத் (23),துரை (28) ஆகியோர் முத்துராஜை வழிமறித்து, சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முத்துராஜ் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக பூதப்பாண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் மாவட்டகூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதிஜோசப்ஜாய், குற்றம் சுமத்தப்பட்டசெல்வன், செல்வசிங், சுரேஷ், ரஷீத், துரை ஆகியோருக்கு ஆயுள்சிறைத் தண்டனை மற்றும் தலாரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x