Published : 03 Mar 2024 05:43 AM
Last Updated : 03 Mar 2024 05:43 AM
கோவை: கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மைவி3ஆட்ஸ் நிறுவனம் விதிகளை மீறி முதலீடு திரட்டியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, விதிகளை மீறி நிதி திரட்டியதாக அந்த நிறுவன இயக்குநர் சக்திஆனந்தன் மீது மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சக்திஆனந்தன் விற்பனை செய்த ஹெர்பல் மருந்துகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டபோது, புதுச்சேரியைச் சேர்ந்த விஜயராகவன் என்பவர், மருந்துகளை வழங்கி வந்தது தெரிந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘விஜயராகவனிடம் விசாரித்தபோது, நேச்சுரோபதியில் பி.ஹெச்டி. பட்டம் பெற்றுள்ளதாக தெரிவித்தார். அவரது சான்றிதழ்களை பல்கலை.க்கு அனுப்பி ஆய்வு செய்தபோது, அவை போலியானது என்று தெரிந்தது.
இதையடுத்து, மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் விஜயராகவன் மீது வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்துள்ளோம். மேலும், மை வி3 ஆட்ஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியாகவும் விஜயராகவன் உள்ளார் என்று கூறப்படுகிறது. அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT