Published : 31 Jan 2024 06:13 AM
Last Updated : 31 Jan 2024 06:13 AM

திருத்தணி | நிலத்தின் வழிகாட்டி மதிப்பீடுக்காக ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சார் பதிவாளர் உட்பட 2 பேர் கைது

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்(53). நிலத் தரகரான இவர், கடந்த 22-ம் தேதி பத்திரப்பதிவு செய்யப்பட்ட ஆர்.கே.பேட்டை அடுத்த விளக்கணாம்பூடி புதூரில் உள்ள 70 சென்ட்நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பீடுசெய்வதற்காக சமீபத்தில் ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர்அலுவலகத்தை அணுகினார்.

அப்போது, அந்த நில ஆவணத்தை வழிகாட்டி மதிப்பீடுக்காக மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க, ஆர்.கே.பேட்டை சார்பதிவாளரான, கடலூர் மாவட்டம்,ஆலாடு கிராமத்தைச் சேர்ந்த செல்வராமச்சந்திரன்(39) ரூ.50ஆயிரத்தை லஞ்சமாகக் கேட்டுள்ளார். அதற்கு ரூ.35 ஆயிரம்தருவதாக பேசப்பட்டது. ஆனால், லஞ்சம் கொடுக்கவிரும்பாத ஜெய்சங்கர், செல்வராமச்சந்திரன் மீது திருவள்ளூர்லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் ஆலோசனையின் படி, நேற்று செல்வராமச்சந்திரனிடம் ரசாயனபவுடர் தடவப்பட்ட ரூ.35 ஆயிரத்தை ஜெய்சங்கர் லஞ்சமாகஅளிக்கச் சென்றார். அப்போது, செல்வராமச்சந்திரன் அறிவுறுத்தலின்படி, ஒப்பந்த ஊழியரான, கணினி இயக்கும் சிவலிங்கம் (48) என்பவரிடம் ஜெய்சங்கர் ரூ.35 ஆயிரத்தை வழங்கினார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையின்காஞ்சிபுரம் டிஎஸ்பி கலைச்செல்வம், திருவள்ளூர் காவல்ஆய்வாளர் தமிழரசி அடங்கியலஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், செல்வராமச்சந்திரன், சிவலிங்கம் ஆகியோரை கைதுசெய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x