Published : 17 Jan 2024 05:26 AM
Last Updated : 17 Jan 2024 05:26 AM
திருச்சி: திருச்சி ராமலிங்க நகர் முதலாவது பிரதான சாலை 5-வது குறுக்குத் தெரு சிவா நகரைச் சேர்ந்தவர் மருத்துவர் ஆனந்த். சில நாட்களுக்கு முன்இவரது செல்போனுக்கு பேசிய ஒருவர், தான் கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்கள் முகவரியில் இருந்து தைவான் நாட்டுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களின் பார்சல் பெறப்பட் டுள்ளது, இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளேன் எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.
அதன்பின், மறுநாள் மற்றொருவர் செல்போனில் தொடர்பு கொண்டு,தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகம் செய்து, ‘‘உங்களது வங்கிக்கணக்கு மூலம் பணம் மோசடி நடந்துள்ளதாக புகார் வந்துள்ளது. எனவே, உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் முழுவதையும் நான்கூறும் மும்பையில் உள்ள பஞ்சாப்நேஷனல் வங்கி கணக்குக்கு அனுப்ப வேண்டும். கணக்கு சரிபார்த்தபின் அந்த தொகை உங்கள்வங்கிக் கணக்குக்கு திருப்பி அனுப்பப்படும்’’ எனக் கூறியுள்ளார்.
இதை நம்பிய ஆனந்த், தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.52 லட்சத்து 10 ஆயிரத்து 364-ஐ அந்த நபர் கூறிய இரு வேறு வங்கி கணக்கு களுக்கு அனுப்பி வைத்தார்.
அதன்பின், அந்த நபரின் செல்போன் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு விட்டது. இதுகுறித்து அவர்அளித்த புகாரின்பேரில், திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT