

திருச்சி: திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லரியில் முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வுத் தொகையைத் தராமல் அந்த நிறுவனம் ஏமாற்றிய தாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, அந்த நிறுவனத்தில் முதலீடுசெய்தவர்கள் அளித்த புகார்களின் பேரில், ஜுவல்லரி உரிமையாளர்கள் மதன், அவரதுமனைவி கார்த்திகா உள்ளிட்டோர் மீது திருச்சிபொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், திருச்சிகிளை மேலாளர் நாராயணனைக் கைது செய்தனர். ஆனால், மதன், கார்த்திகா ஆகியோர் தலைமறைவாக இருந்தனர்.
இந்நிலையில், மதுரையில் உள்ள பொருளாதார முதலீட்டுக் குற்றங்களுக்கான சிறப்பு நீதி மன்றத்தில் கடந்த 6-ம் தேதி மதன் சரணடைந்தார். அவரை 7 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், தலைமறைவாக இருந்த பிரணவ் ஜுவல்லரியின் மற்றொரு உரிமையாளரும், மதனின் மனைவியுமான கார்த்திகாவை, பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் திருச்சியில் நேற்று கைது செய்தனர்.