Published : 03 Dec 2023 04:04 AM
Last Updated : 03 Dec 2023 04:04 AM

காமெடி நடிகர் வீட்டில் லேப்டாப், செல்போன் திருட்டு

ஜெயச்சந்திரன்

சென்னை: வடபழனியில் நடிகர் வீட்டில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான லேப்டாப், செல்போன் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வட பழனி அழகர் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சில திரைப் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவரது வீட்டில் நேற்று இரவு ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் செல்போன்களை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து, ஜெயச் சந்திரன் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர், 6 நாட்களுக்கு முன்பு தான் கே.கே.நகரில் இருந்து வடபழனிக்கு குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x