Published : 28 Oct 2023 06:10 AM
Last Updated : 28 Oct 2023 06:10 AM

சென்னை | மது வாங்க கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு ரவுடியை காரில் கடத்திய 5 பேர் கும்பல் கைது

சென்னை: சென்னை அயனாவரம், தாகூர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர்அருண் (23). ரவுடியான இவர் மீது 5-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள்உள்ளன. இவர் கடந்த 25-ம் தேதி அயனாவரம் பாளையக்கார தெருவில்நடந்து சென்றபோது, காரில் வந்த 5 பேர் கும்பல் அருணை காரில்கடத்திச் சென்றது. பின்னர், அவர் மீது சரமாரியாக தாக்கி, கத்தியால்வெட்டியது. பின்னர், அவரை ஆள் நடமாட்டம் இல்லாத இடம் பார்த்து காரிலிருந்து கீழே தள்ளி விட்டுவிட்டு தப்பியது.

காயம் அடைந்த அருண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், சம்பவம் தொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், அருணை கடத்திதாக்கியது ராகுல் (23), யஸ்வந்த் (23), மகேஷ் குமார் (28), ஆலன்ஜோஸ்வா (23), மோகன் (24) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

ரவுடி கடத்தலுக்கான பின்னணி குறித்து போலீஸார் கூறுகையில், ``காந்தி ஜெயந்தி அன்று தினம் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்ய, தற்போது கைது செய்யப்பட்ட 5 பேரும் முடிவு செய்து, அதற்கு முன்னரே டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க நண்பரான அருணிடம் ரூ.8 ஆயிரம் கொடுத்துள்ளனர். அதன்படி, அருண் மதுபாட்டில்களை வாங்கி தனது வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.

இதை அறிந்த போலீஸார் அதை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அருண், தனது நண்பர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் நம்ப மறுத்துள்ளனர். எனவே, தாங்கள்கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டே அருணை 5 பேரும் சேர்ந்து கடத்தி தாக்கியுள்ளனர்'' என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x