Published : 26 Oct 2023 07:10 AM
Last Updated : 26 Oct 2023 07:10 AM
பஞ்சாபில் போதைப் பொருள் விற்பனையில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது. பெண்கள் போதைப் பொருள் விற்பனை செய்யும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பஞ்சாபில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக புகார் உள்ளது. இதற்கு, அம்மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவது முக்கிய காரணமாக உள்ளது.
போதைப் பொருளை பஞ்சாப் வாசிகள் இடையே விற்பனை செய்வதில் பெண்களின் பங்குஅதிகரித்து வருகிறது. இம்மாநிலத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் போதைப் பொருள் விற்றதாக பெண்கள் மீது பதிவாகும் வழக்குகள் அதிகரித்து வருகிறது.
பெண்கள் போதைப் பொருள்விற்பதை பலர் தங்கள் கைப்பேசிகளில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். வைரலாகி வரும் இப்பதிவுகளால் பஞ்சாபின் காவல்துறையும் தர்மசங்கடத்திற்கு ஆளாகி வருகிறது.
குறிப்பாக, பஞ்சாபின் பாத்ஷாபூரில் இளம்பெண் ஒருவர் போதைப் பொருள் விற்கும் காட்சி அவரது பின்புலத்துடன் வெளியாகி உள்ளது. இந்தப் பெண்ணின் தந்தை மற்றும் தாயும் கூட போதைப் பொருள் விற்பனை செய்துள்ளனர்.
இதன் காரணமாக இவர்கள்சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த இளம்பெண்ணைபோல் பல பெண்கள் தங்கள்குடும்பத் தலைவர் செய்யும் தவறால் இந்தத் தொழிலுக்கு ஒரு விபத்தாக வர நேரிட்டுள்ளது.
இப்பிரச்சினையை ‘கல்சா வாக்ஸ்’ எனும் சமூகநல அமைப்பு புள்ளிவிவரத்துடன் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன்படி பஞ்சாபில் இந்த வருடம் மட்டும் இதுவரையிலும் தேசிய போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 50 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாபில் போதைப் பொருள் அதிகம் விற்பனையாகும்
25 பெண்கள் மீது வழக்கு: கிராமங்களின் காவல் நிலையங்களில் பெண்கள் மீதான வழக்குகள் அதிகரித்து வருகின்றன. உதாரணமாக, கபூர்தலா மாவட்டத்தின் சுபான்பூர் காவல் நிலையத்தில் 25 பெண்கள் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கபூர்தலா மாவட்ட எஸ்எஸ்பி வத்சலா குப்தா கூறும்போது, ‘‘போதைப் பொருள் தடுப்புக்காக பொதுமக்கள் இடையே தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல பெண்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் காரணமாக இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர். இதுபோன்றவற்றில் அக்குடும்பத்தில் அனைவரிடம் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அவர்களது வருமானத்திற்கான வழியை சமூகநல அமைப்புகளுடன் இணைந்துஉருவாக்கி தரவும் முயற்சிக்கப்படுகிறது” என்றார்.
கபூர்தலா காவல்துறையின் முயற்சியால் அம்மாவட்ட கிராமங்களில் மூத்த பெண்களை கொண்டு பல குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. இதேபோல், மூத்த ஆண்களை கொண்டும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் அன்றாடம் தங்கள் பகுதியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு பலன் கிடைத்து வருவதால் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT