Published : 18 Oct 2023 06:16 AM
Last Updated : 18 Oct 2023 06:16 AM

ரேஷன் பொருட்கள் கடத்தியதாக ஒரே மாதத்தில் 748 பேர் கைது

கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை கடத்தியதாக 748 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறைஅலுவலர்களும் தொடர் ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் கடந்த செப்.1 முதல் 30-ம் தேதி வரைஒரே மாதத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.61.25 லட்சம் மதிப்புள்ள4,111 குவிண்டால் அரிசி, 151 காஸ் சிலிண்டர்கள், 747 கிலோ கோதுமை, 186 கிலோ துவரம் பருப்பு, 1,481 லிட்டர் மண்ணெண்ணெய், சர்க்கரை 37 கிலோ மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 158 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட 748 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல், பதுக்கல் குறித்து 1800 599 5950 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x