Published : 04 Oct 2023 08:06 AM
Last Updated : 04 Oct 2023 08:06 AM

டெல்லியில் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்த 2 பெண்கள் கைது: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் விற்றதாக ஒப்புதல்

புதுடெல்லி: நாட்டின் பல மாநிலங்களில் கள்ளத் துப்பாக்கிகள் தொடர்பான குற்றங்கள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக பலர் கைதுசெய்யப்படுகின்றனர். இந்நிலையில், பெண்களும் இத்தகைய குற்றத்தில் ஈடுபடும் அதிர்ச்சி தகவல் முதல்முறையாக வெளியாகியுள்ளது.

டெல்லி எம்.பி. சாலையில் நேற்று பெண்கள் இருவர் சந்தேகத்திற்கு உரிய வகையில் நடமாடுவதை கண்ட போலீஸார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்பெண்களின் பைகளை சோதனையிட்டதில் அவற்றில் 10 கைத்துப்பாக்கிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சட்டவிரோத கள்ளத் துப்பாக்கிகளான அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இப்பெண்கள் இருவரும் உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷெஹரை சேர்ந்த சன்ச்சல் (32) மற்றும் விகான்ஷா (23) எனத் தெரியவந்தது.

இவர்கள் மீது டெல்லி சிறப்புபோலீஸார் வழக்கு பதிவு செய்துவிசாரணையை தொடங்கியுள்ள னர். விசாரணையில், இக்கும்பலின் தலைவன் உ.பி.யின் மதுராவை சேர்ந்த சோனு சவுத்ரி என்பதும் மத்திய பிரதேசத்தின் கர்கவ்னில் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு துப்பாக்கிக்கு ரூ.7,000: கடந்த ஏழு வருடங்களாக இந்த துப்பாக்கிகளை இப்பெண்கள் டெல்லிக்கு வந்து ஒப்படைத்துச் சென்றுள்ளனர். இவ்வாறு ஒப்படைக்க தற்போது ஒரு துப்பாக்கிக்கு ரூ.7,000 அளிக்கப்படுகிறது.

இது குறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் டெல்லி காவல் துறை வட்டாரம் கூறும்போது, “இந்தத் துப்பாக்கிகளின் விலை குறித்து அப்பெண்களுக்கு தெரியவில்லை. டெல்லியிலிருந்து இத்துப்பாக்கிகள் நாட்டின் பலபகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன. தமிழகம் உள்ளிட்டதென் மாநிலங்கள் சிலவற்றுக்கும் இவை விநியோகம்செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்.

கைதான சன்ச்சலின் சகோதரி கடந்த 2018-ல் போதை மருந்து கடத்தலில் டெல்லி போலீஸாரிடம் கைதாகி உள்ளார். இவரையும், இவரது மாமன் முறை உறவினரான சோனு சவுத்ரியையும் டெல்லி போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த கும்பலின் மூலம் இதுவரை சுமார் 700 கள்ளத் துப்பாக்கிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x