Published : 20 Aug 2023 04:02 AM
Last Updated : 20 Aug 2023 04:02 AM

கடையநல்லூர் அருகே இளம்பெண் கொலை வழக்கில் 5 பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வலசை கிராமத்தில் பயன்பாடற்ற நிலையில் உள்ள கிணற்றில் கடந்த 10-ம் தேதி மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் மிதந்தது. கடையநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்பெண்ணின் கையில் எம்.வி. என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. அவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள இருவாணிவயல் பகுதியைச் சேர்ந்த வினோதினி(21) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை, கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தைச் சேர்ந்த மனோ ரஞ்சித்(22) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வினோதினி, மனோ ரஞ்சித் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வினோதினிக்கு சிவகங்கையைச் சேர்ந்த இளைஞருடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த 5-ம் தேதி வினோதினி வலசைக்கு வந்துள்ளார்.

அப்போது, மனோ ரஞ்சித்துடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த மனோ ரஞ்சித் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் பரத், மகா பிரபு, கடைய நல்லூரைச் சேர்ந்த மணிகண்டன், 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து வினோதினியை கொலை செய்து, உடலை மூட்டையில் கட்டி கிணற்றில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x