Published : 19 Aug 2023 04:02 AM
Last Updated : 19 Aug 2023 04:02 AM

மாணவிக்கு பாலியல் தொல்லை: கல்லூரி பேராசிரியர் மீது வழக்கு @ பல்லடம்

திருப்பூர்: பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் பாலமுருகன் (51). இவர், அதே கல்லூரியில் படித்து வரும் மாணவிக்கு, கடந்த மாதம் 14-ம் தேதி பாலியல் தொல்லை அளித்தார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, பெண்கள் பாதுகாப்பு எண் 181-ல் புகார் அளித்தார். இதையடுத்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரித்து, பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.

கல்லூரி தரப்பிலும் தனியாக குழு அமைத்து மாணவிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வரும் 21-ம் தேதி வரை பாலமுருகன் விடுப்பில் உள்ளதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x