Published : 06 Aug 2023 05:53 AM
Last Updated : 06 Aug 2023 05:53 AM
திருவள்ளூர்: மீஞ்சூரில் தொழிலதிபரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வத்தாமனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் என்பவர்,தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின்மாநில முதன்மை பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். கடந்தசில நாட்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச்சேர்ந்த ஜெயபிரகாஷ் என்ற தொழிலதிபரை துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தொழிலதிபர் ஜெயபிரகாஷ், மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் தனிப்படை அமைத்து அஸ்வத்தாமனை தேடி வந்தனர்.
7 தோட்டாக்கள் பறிமுதல்: இந்நிலையில், பெங்களூரில் இருந்து காரில் வந்த அஸ்வத்தாமனை, திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி காவல் துறையினர் நசரத்பேட்டையில் கைது செய்து அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனிடம் ஆவடி, முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர், மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று அங்கு 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பின்னர், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர். துப்பாக்கி காட்டி தொழிலதிபரை மிரட்டிய அஸ்வத்தாமன், சென்னையின் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வத்தாமன், பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT