Published : 25 Jul 2023 04:25 PM
Last Updated : 25 Jul 2023 04:25 PM
கும்பகோணம்: கும்பகோணத்திலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட அலுவலகத்தின் பீரோ, பூட்டுகள் உடைத்திருப்பது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் சாந்தி நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திலுள்ள 2 தளங்களில் இஸ்லாமியர்கள் தினந்தோறும் 5 வேளை தொழுகை மற்றும் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையும், ஜமாத் கூட்டமும் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், அதிகாலை அந்த அலுவலகத்தில் தொழுகையில் ஈடுபட வந்த இஸ்லாமியர்கள், அங்கு பூட்டுகள் உடைத்திருப்பது அறிந்து, நிர்வாகிகளுக்கு தகவலளித்ததின் பேரில் அங்கு இஸ்லாமியர்கள் திரண்டனர்.
இது தொடர்பாகத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்டத் தலைவர் ஜாபர் அலி புகாரளித்ததின் பேரில், அங்கு வந்த போலீஸார், உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டபோது, காலை அங்கு வந்த மரம் நபர்கள், 2 தளங்களிலுள்ள 10 அறைகளின் பூட்டுக்களையும், பீரோவை உடைத்து அதிலுள்ள பொருட்களை கலைத்து விட்டு, கடப்பாரை, இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பூட்டு, பீரோவை உடைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை அங்கேயே விட்டு சென்றுள்ளது தெரிய வந்தது. பின்னர் போலீஸார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT