Published : 22 Jul 2023 06:03 AM
Last Updated : 22 Jul 2023 06:03 AM
சென்னை: `ரஜினிகாந்த் பவுண்டேசன்' என்ற அறக்கட்டளையின் அறங்காவலர் டி.எஸ்.சிவராம கிருஷ்ணன்என்பவர், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:
ரஜினிகாந்த் பவுண்டேசன் அறக்கட்டளை சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறோம். டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவசமாகப் பயிற்சி கொடுத்து வருகிறோம்.
இந்நிலையில், நடிகர் ரஜினி புகைப்படத்துடன்,எங்கள் அறக்கட்டளை பெயரில் போலி முகநூல்(ஃபேஸ்புக்) பக்கம் தொடங்கி, பரிசுப் பொருட்கள் வழங்கப் போவதாக கூறி, எங்கள் அறக்கட்டளை பெயரில் சிலர் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபடுகின்றனர். இது ரஜினி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக சென்னை சைபர் க்ரைம் காவல் துணை ஆணையர் கீதாஞ்சலி தலைமையிலான போலீஸார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT