Published : 28 Jun 2023 02:48 PM
Last Updated : 28 Jun 2023 02:48 PM
நாமக்கல்: வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட புகார் தொடர்பாக நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பூபதி என்பவர் உள்ளார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ராசிபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த போது ராசிபுரத்தை சேர்ந்த ஆல்ட்ரின் பாஸ்கோ (எ) ஜெயகுமார் என்பவரிடம் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் பணம் பெற்றதாக வந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு புகார் வந்துள்ளது.
இதன் பேரில் கடந்த 2020-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று காலை நாமக்கல் மோகனூர் சாலை திருநகரில் நகரில் உள்ள பூபதி குடியிருக்கும் வீடு, மல்ல சமுத்திரத்தில் உள்ள தந்தை தங்கவேல் வீடு, சவுரி பாளையத்தில் உள்ள இவரது மாமனார் சுப்பிரமணியன் வீடு மற்றும் சேலம் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஆகிய 4 இடங்களில் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுபாஷினி தலைமையிலான போலீஸார் இன்று காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உதவி ஆய்வாளருக்கு சொந்தமான 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT