Published : 22 Jun 2023 04:07 AM
Last Updated : 22 Jun 2023 04:07 AM
வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள தம்மனம்பட்டி நான்கு வழிச்சாலையில் நள்ளிரவில் பெண்ணின் உடல் மீது அடுத்தடுத்து வாகனங்கள் ஏறிச் சென்றதால் சிதைந்த நிலையில் கிடப்பதாக ரோந்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நெடுஞ்சாலை ரோந்து போலீஸார், வேடசந்தூர் போலீஸாருடன் பெண்ணின் உடல் கிடந்த பகுதிக்கு சென்றனர். பெண்ணின் சேலை, ஜாக்கெட் மட்டுமே அடையாளமாக தெரிந்தது. உடல் முழுவதும் இரவில் அடுத்தடுத்து வாகனங்கள் கடந்து சென்றதால் முற்றிலும் சிதைந்திருந்தது.
இறந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அதிகாலை ஒரு மணிக்கு அந்த இடத்துக்கு எதற்காக வந்தார். விபத்தில் இறந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்து சாலையில் போட்டு சென்றார்களா என வேடசந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT