Published : 18 Jun 2023 07:14 AM
Last Updated : 18 Jun 2023 07:14 AM
கோவை: கோவை ஜிஎஸ்டி இயக்குநரக நுண்ணறிவுப் பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவையில் போலி ரசீது தயாரித்து வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக தொழிலதிபர் ஒருவரின் வீடு மற்றும் வணிக நிறுவன வளாகங்களில் கடந்த 15-ம் தேதி ஜிஎஸ்டி இயக்குநரக நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், ரூ.98 கோடி மதிப்பில் போலி ரசீது தயாரித்து ஜிஎஸ்டி அலுவலகத்தை ஏமாற்றி ரூ.13 கோடி இன்புட்டேக்ஸ் கிரெடிட் என்ற முறையில் பணம் பெற்றது தெரியவந்தது. இவரது செயலால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தவறை தொழிலதிபர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். போலி ரசீதில் தெரிவிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கோவை ஜிஎஸ்டி இயக்குநரக நுண்ணறிவுப் பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT