Published : 08 Jun 2023 04:03 AM
Last Updated : 08 Jun 2023 04:03 AM
உடுமலை: உடுமலை அடுத்த தீபாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (28). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (26). இருவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்தனர். அதே ஊரை சேர்ந்த மற்றொரு நபரை, வசந்தி 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அந்நபருடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரைப் பிரிந்து மீண்டும் சசிக்குமாருடன் சேர்ந்து வசித்துள்ளார். கர்ப்பமாக இருந்த வசந்திக்கு, கடந்த 35 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு எழுந்து வந்தது.ஆத்திரம் அடைந்த வசந்தி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். தகவலறிந்து சென்ற தளி போலீஸார், தண்ணீர் தொட்டிக்குள் மிதந்த குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வசந்தியை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT