Published : 06 Jun 2023 06:04 AM
Last Updated : 06 Jun 2023 06:04 AM

சென்னை | திறந்திருக்கும் வீடுகளை குறிவைத்து திருடி வந்தவர் போலீஸில் ஒப்படைப்பு

சென்னை: சென்னை ஆலப்பாக்கம், மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (40). இவர்,கடந்த 3-ம் தேதி இரவு கதவைத் திறந்து வைத்துவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலை 4 மணியளவில் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது, ஒருவர் ஹரிகிருஷ்ணனின் வீட்டிலிருந்து வெளியே ஓடினார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஹரிகிருஷ்ணன் `திருடன், திருடன்' எனச் சத்தம் போட்டவாறு விரட்டினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு திருடனைவிரட்டிப் பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து, அவரிடமிருந்த 3 செல்போன்களை மீட்டுவிட்டு மதுரவாயல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பிடிபட்ட நபர் ஆலப்பாக்கம் பாரதிதாசன் நகர், 10-வது தெருவைச் சேர்ந்தபாலாஜி (27) என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸார், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட பாலாஜி அதிகாலை நேரத்தில் திறந்திருக்கும் வீடுகளை நோட்டமிட்டு வீடு புகுந்து திருடுவதை வழக்கமாகக் கொண்டவர். அவர் மீது ஏற்கெனவே திருட்டு, வழிப்பறி என 7 குற்ற வழக்குகள் உள்ளன'' என்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x