Published : 12 Apr 2023 05:51 AM
Last Updated : 12 Apr 2023 05:51 AM
திருச்சி: திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று காரணமாக 7 கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் தற்போது 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 9 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் கர்ப்பிணிகள். இவர்கள் அனைவரும் பிற உடல் நல பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கர்ப்பிணிகள் 7 பேர் உட்பட 9 பேரும் தற்போது நலமுடன் உள்ளனர்.
இருப்பினும் மேலும் ஒரு வாரம் அவர்கள் தொடர் கண்காணிப்புக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்படுவர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment