Published : 30 Mar 2023 06:36 AM
Last Updated : 30 Mar 2023 06:36 AM

9 மருந்துகளை பயன்படுத்தக் கூடாது; கரோனாவுக்கு 3 வகையாக பிரித்து சிகிச்சை: மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகம் குஜராத், மகாராஷ்டிரம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை கரோனா சிகிச்சைதொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை பாதிப்பின் தன்மைக்கேற்ப லேசான, மிதமான, தீவிரமான என மூன்று பிரிவுகளாக பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும். லேசான தொற்று பாதிப்புள்ளவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.மிதமான தொற்று பாதிப்புள்ளவர்களை (மூச்சுத்திணறல், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90 முதல் 93வரை) மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும்.

தீவிர தொற்றுபாதிப்புள்ளவர்களை (மூச்சுத்திணறல், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90 கீழ்) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். அதேபோல், கரோனா சிகிச்சைக்கு Lopinavir-ritonavir, Hydroxychloroquine, Ivermectin, Neutralizing monoclonal antibody, Convalescent plasma, Molnupiravir, Favipiravir, Azithromycin, Doxycycline ஆகிய 9 மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி ஆய்வு: இதற்கிடையே, தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போட்டு பலமாதங்கள் ஆகிவிட்டதால் நோய்எதிர்ப்பாற்றால் எந்த அளவுக்கு பொதுமக்களிடம் உள்ளது என மாநிலம் முழுவதும் ரேண்டம் அடிப்படையில் ஆய்வு நடக்கவுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றுசுகாதார அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x