Published : 28 Mar 2023 05:41 AM
Last Updated : 28 Mar 2023 05:41 AM
புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனா பாதிப்பு 1,800-க்கு மேல் பதிவாகி உள்ளது. சனிக்கிழமை 1,890 ஆக இருந்த இது, ஞாயிற்றுக்கிழமை 1,805 ஆக பதிவாகி உள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரில் மேலும் 6 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 5,30,837 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,300 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை நோயாளிகள் எண்ணிக்கை 437 ஆக இருந்தது. இந்த மாநிலத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இது கடந்த அக்டோபர் மாதத்துக்குப் பிறகு அதிகபட்ச அளவாகும்.
கரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மும்பையில் ஒருசில தனியார் மருத்துவமனைகள் ஓராண்டுக்குப் பிறகு கரோனா வார்டுகளை மீண்டும் திறந்துள்ளன. சில மருத்துவமனை களில் முகக்கவசம் அணிவதும் கரோனா பரிசோதனையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT