Published : 20 Jun 2022 07:36 PM
Last Updated : 20 Jun 2022 07:36 PM
சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 347, பெண்கள் 339 என மொத்தம் 686 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 294 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 61,560 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 19,583 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 257 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 3,951 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 692 ஆகவும், சென்னையில் 306 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் கரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது.
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 12,781 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 76,700பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கரோனா அதிகரிப்பு குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி > தனியார் மருத்துவமனைகளில் ‘சிஎஸ்ஆர்’ மூலம் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசிக்கு ஏற்பாடு: மா.சுப்பிரமணியன் சிறப்புப் பேட்டி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT