Published : 06 May 2022 05:44 AM
Last Updated : 06 May 2022 05:44 AM
சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது 1.50 கோடி பேர் 2-ம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி போடும் வகையில், கிராம வாரியாக பட்டியல் தயாரித்து https://tndphpm.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தடுப்பூசி போடாதவர்கள் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த தகவலைக் கொண்டு, கிராம வாரியாக தேவைக்கேற்ப தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும். அனைவருக்கும் முழுமையாகத் தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடுத்த அலை வருவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே, இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT