Published : 27 Apr 2022 07:32 PM
Last Updated : 27 Apr 2022 07:32 PM

சென்னையில் 59 பேர் உள்பட தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை : தமிழகத்தில் இன்று ஆண்கள் 52, பெண்கள் 25 என மொத்தம் 77 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 59 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 53,756 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 15,284 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 34 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 447 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 72 ஆகவும், சென்னையில் 52 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சென்னை ஐஐடியில் பிஏ2 என்று அழைக்கப்படும் ஒமைக்ரான் தொற்றுதான் கண்டறியப்பட்டுள்ளதாகவும், புதிய உருமாறிய தொற்று இல்லை சுகாதாரத் தறை தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் மேலும் 33 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை ஐஐடியில் கடந்த 19-ம் தேதி ஒரு மாணவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, 20-ம் தேதி 2 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில், 21-ம் தேதி மேலும் 9 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, ஐஐடியில் உள்ள அனைத்து மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி தற்போது வரை சென்னை ஐஐடியில் 4974 பேருக்கு கரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2729 முடிவுகள் தற்போது வரை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வரை 111 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 33 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மொத்த பாதிப்பு 145 ஆக உயர்ந்துள்ளது.

இதில் முதற்கட்டமாக 25 மாதிரிகள் மரபணு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில் உருமாறிய கொரனோ பாதிப்புகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 93 சதவீதத்தினருக்கு ஒமைக்ரான் BA2 பாதிப்பு இருக்கும் சூழலில் 25 நபர்களுக்கும் இந்த வகை பாதிப்பை உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய வகை உருமாற்றம் இல்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x