Published : 29 Sep 2020 02:36 PM
Last Updated : 29 Sep 2020 02:36 PM

பாக்டீரியாக்களுக்கு எதிரான செல்கள் அதிக அளவில் செயலாற்றுவதே தீவிர கரோனா பாதிப்புக்குக் காரணம்: ஆய்வில் தகவல்

உடல் நோய் எதிர்ப்பாற்றல் அமைப்பின் ஒருவகையான டி-செல்கள் பாக்டீரியா கிருமித் தொற்றுக்கு எதிரானது, இந்த நோய் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு டி-செல்கள் மிதமானது முதல் தீவிர கரோனா நோயாளிகளிடத்தில் வலுவாக செயலூக்கம் பெறுகிறது.

MAIT செல்கள் எனப்படும் இத்தகைய செல்கள் கரோனா நோயாளிகளின் காற்றுப்பாதையில் அதிக அளவில் சேர்கிறது, இதுதான் அழற்சி உருவாக்க செல்களாகும். இதனால்தான் இது அதிகமாகச் செயலாற்றும்போது கரோனா மரணங்கள் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஸ்வீடனின் கரோலின்ஸ்கா ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் உட்பட இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறுவதென்னவெனில் MAIT செல்கள் எனப்படும் இத்தகைய செல்கள் ஆரோக்கியமான நபர்களின் ரத்தத்தில் உள்ள டி-செல்களில் 1 முதல் 5% வரை காணப்படுகிறது. இது பாக்டீரியாக்களை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது.

ஆனால் இது சில வைரஸ்களுக்கும் வினையாற்றுவதாக இந்த ஆய்வில் கூறுகின்றனர்.

டி-செல்கள் என்பது ஒரு வகையான ரத்த வெள்ளை அணுக்கள் செல்களாகும், இது கிருமித் தொற்று உள்ள செல்களை அடையாளம் காண்கிறது, இது நம் உடல் நோய் எதிர்ப்பாற்றல் அமைப்பில் மிக முக்கியமான ஒரு அங்கமாகத் திகழ்கிறது.

இந்த ஆய்வின் முடிவுகள் சயன்ஸ் இம்யூனாலஜி என்ற இதழில் வெளியாகியிருக்கிறது, அதில் இந்த MAIT செல்கள் கரோனா வைரஸ் நோயிலும் முக்கியப் பங்காற்றுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்வீடனின் கரோலின்ஸ்கா பல்கலைக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மிதமானது முதல் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட 24 கரோன நோயாளிகள் ரத்த மாதிரிகளில் இந்த MAIT செல்களின் தன்மை பற்றியும் இருப்பையும் ஆராய்ந்தனர். இந்த ரத்த மாதிரி முடிவுகளை 14 ஆரோக்கிய நபர்கள் மற்றும் கோவிட் 19-லிருந்து மீண்ட 45 பேர் ரத்த மாதிரிகளுடன் ஒப்பிட்டனர்.

இதில் 4 மாதிரிகள் மருத்துவமனையில் கரோனாவில் இறந்தவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

“கரோனா சிகிச்சையில் மிக முக்கியமானது நம் நோய் எதிர்ப்பாற்றல் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைப் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் கரோனா நோயை படுமோசமாக்குவதிலும் நோய் எதிர்ப்பாற்றல் எதிர்வினை பங்காற்றி விடுகிற்து” என்று இந்த ஆய்வில் பங்கேற்ற ஜொஹான் சாண்ட்பர்க் தெரிவித்தார்.

இந்த MAIT செல்களின் எண்ணிக்கை மிதமானது முதல் தீவிர கரோனா நோயாளிகளிடத்தில் கடுமையாகக் குறைவாகக் காணப்படுகிறது. இவை தவிர மற்ற செல்கள் அதிகமாகச் செயலாற்றுகின்றன.

இந்த முடிவுகளைக் கொண்டு MAIT செல்கள் நாவல் கரோனா வைரஸுக்கு எதிரான எதிர்பாற்றல் வினையாற்றுதலில் ஈடுபடுகிறது என்று விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.

ஆரோக்கியமான நபர்களை விட, அழற்சி உருவாக்கும் இந்த MAIT செல்கள், கோவிட்-19 நோயாளிகளின் காற்றுப்பாதையில் பெரிய அளவில் சேர்ந்து விடுகிறது.

மொத்தமாக இந்த ஆய்வை கருத்தில் கொள்ளும்போது, MAIT செல்களின் எண்ணிக்கை நோய் எதிர்ப்பாற்றல் அமைப்பில் கோவிட்-19 நோயாளிகளிடத்தில் குறைந்து காணப்படுகிரது. காரணம் இது காற்றுப்பாதையில் அதிகளவில் சேர்ந்து விடுகிறது.

கோவிட் 19-னால் மரணமடைந்தவர்களில் இந்த MAIT செல்கள் அதிக அளவில் செயலாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. அதாவது காற்றுப்பாதையில் போய் இவை சேர்ந்து விடுகின்றன, இதனால்தான் எதற்கும் அடங்காத மூச்சுத்திணறல் கரோனா நோயாளிகளுக்கு ஏற்படுகிறது.

சில கரோனா நோயாளிகளிடத்தில் MAIT செல்கள் அதிக அளவில் செயலாற்றி, தீவிர நோயாக மாற்றி விடுகிறது என்கிறது இந்த ஆய்வு.

-பிடிஐ தகவல்களுடன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x