Published : 30 Aug 2020 07:29 PM
Last Updated : 30 Aug 2020 07:29 PM

ஏற்கெனவே இருக்கும் டி-செல்கள் நினைவுப் பதிவு தொற்றின் தீவிரத்தை குறைக்கலாமே தவிர கரோனாவை தடுக்காது- ஆய்வில் தகவல்

செல், நேச்சர், சயன்ஸ், சயன்ஸ் இம்யூனாலஜி போன்ற மதிப்பு மிக்க இதழ்களில் குறைந்தது 5 ஆய்வுக் கட்டுரைகளாவது வெளியிடப்பட்டிருக்கும். இந்தக் கட்டுரைகளில், நாவல் கரோனா வைரஸினால் பாதிக்கப்படாத 20%-50% வரையிலான மக்கள், ஏற்கெனவே சாதாரண சளி, ஜுர கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதினால் பெறப்பட்ட டி-செல்களின் நினைவுகளை அல்லது டி-செல் தடுப்புகளை தக்கவைத்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

நினைவு டி-செல்கள் கோவிட் -19க்கு எதிராக குறுக்கு எதிர்வினையாற்றுகிறது என்பதை கலிபோர்னியாவின் லா ஜொல்லா நோய் எதிர்பாற்றலியல் ஆய்வாளர்கள் ஒரு 3 ஆய்வுக் கட்டுரைகளில் நிரூபித்துள்ளனர்.

மும்பை , டெல்லி, நியூயார்க் நகரங்களில் கரோனா வைரஸ் உச்சபட்சமாக பரவியது. அதாவது முன்கூட்டியே உடலில் இருக்கும் டி-செல்கள் சார்ஸ் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பு வினையாற்றுவதாக தவறாகப் புரிந்து கொண்டனர், இதனையடுத்ஹ்டு 20-30% மக்களுக்கு தொற்று ஏற்பட்டால் அது மக்கள் தொற்றுப் பரவல் தடுப்பாற்றலை (ஹெர்டு இம்யூனிட்டி) எட்டி விட்டதாக தவறாகவும் புரிந்து கொண்டனர்.
கலிபோர்னியா ஆய்வாளர்கள், “முன்னமேயே உடலில் உள்ள சார்ஸ் கோவிட் வைரஸ் தடுப்பு டி-செல் நோய்த்தடுப்பு கரோனா வைரஸ் நோயின் தீவிரத்தைக் குறைக்கிறது, எனவே முன்னமேயே உடலில் உள்ள CD4+ T cell-களின் வைரஸ் பற்றிய நினைவு கரோனாவுக்கு எதிராகப் போராடி அதன் தீவிரத்தைக் குறைக்கிறது” என்று கூறுகின்றனர்.

ஆனால் நோயின் தீவிரத்தாக்கத்தை வேண்டுமானால் குறைக்குமே தவிர கோவிட்-19 வைரஸையே அது தடுப்பு போட்டு நிறுத்தி விடாது. டி-செல்கள் பொதுவாகவே அதைச் செய்யாது. கோவிட்-19 தீவிரத்தைக் குறைத்து மரணத்தை டி-செல்களின் முந்தைய வைரஸ் நினைவு எதிர்ப்பாற்றல் தடுக்கலாம் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கரோனா வைரஸ் மறுதொற்றை டி-செல்கள் தடுக்காது, ஆனால் மீண்டும் ஏற்படும் கரோனா தீவிர வைரஸ் தாக்கத்தை குறைக்கும், தீவிரத்தைக் குறைப்பதில் டி-செல்களுக்கு ஒரு பங்கு உண்டு.

ஆனால் டி-செல்களால் ஹெர்டு இம்யூனிட்டி வந்து விடும் என்று தவறாகப் புரிந்து கொள்வதைப் பற்றி இந்த ஆய்வு கூறுவதென்னவெனில், “டி-செல்களின் வைரஸ் நினைவு பற்றிய கோட்பாடு சரியானது என்றாலும் சார்ஸ் கோவிட் -2 வினால் அதிகம் பேர் பாதிக்கப்படுவார்கள், ஆனால் தீவிரமாகத் தாக்குறுபவர்களின் மற்றும் மரணமடைவோர் விகிதம் குறையும்” என்கிறது.

பெரும்பாலான வாக்சின்கள் அல்லது தடுப்பூசிகள் தொற்றைத் தடுக்காது, குறைக்கும் அல்லது வைரஸை அகற்றி விடும். இது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது டி-செல்கள் மட்டத்தில் குறுக்கு எதிர்வினை செயல்பாட்டு அளவைப் பொறுத்தது என்றே இவர்கள் கூறுகின்றனர். எனவே டி-செல் செயல்பாடுகளுக்கும் ஹெர்டு இம்யூனிட்டிக்கும் தொடர்பில்லை, தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது என்று இந்த ஆய்வாளர்க்ள் எச்சரிக்கின்றனர்.

-மூலம்: தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x