Published : 04 Aug 2020 01:13 PM
Last Updated : 04 Aug 2020 01:13 PM
கரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 நோய்க்கு எதிரான வாக்சின் தயாரிப்பில் மிகப்பெரிய சவால் அளிப்பது வைரஸ் இரட்டிப்பாகும் போது வெவ்வேறு விதமாக கரோனா வைரஸ் மாற்றமடைகிறது என்பதே, ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஆய்வில் கரோனா வைரஸ் வகைகளில் ஒன்றுக்கொன்று பெரிய வித்தியாசம் இல்லை, ஒன்றுக்கொன்று பெரிய மாற்றங்களெல்லாம் இல்லை என்று ’நல்ல செய்தி’ வெளியாகியுள்ளது.
சுமார் 48 ஆயிரத்து 635 கரோனா வைரஸ் ஜெனோம்களை பகுப்பாய்வுக்கு எடுத்துக் கொண்ட இத்தாலி போலோக்னா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் உலகம் முழுதும் பரவிய கரோனா வைரஸ் மரபணு வரிசைத்தொடர்களை ஆய்வுக்குட்படுத்தியதில் இந்த நல்ல செய்தி தெரியவந்துள்ளது.
சாம்பிள் ஒன்றுக்கு 7 உரு-இயல் மாற்றங்கள் கரோனா வைரஸில் நிகழ்ந்தாலும் ஒன்றுக்கொன்று பெரிய வேறுபாடுகள் தெரியவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“சார்ஸ்-கோவிட் கரோனா வைரஸ் மனிதர்களைப் பாதிக்கக்கூடியதாக மாறியுள்ளது, இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்தது என்னவெனில் கரோனா வைரஸ் மிகவும் குறைவான பரிணாம மாற்றங்கள் கொண்டது என்பதே.
இதன் நம்பிக்கைக்குரிய அறிகுறி என்னவெனில், கரோனாவுக்கு எதிராக நாம் வழங்கி வரும் சிகிச்சைகள், வளர்ந்து வரும் புதிய சிகிச்சைகள், நோய் தடுப்பு மருந்துகள் ஆகியவை நிச்சயம் திறம்பட வேலை செய்யும் என்பதே” என்று இந்த ஆய்வு திட்டவட்டமாக நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி நாவல் கரோனா வைரஸின் 6 வகையான மாறுமைகள் இருக்கின்றன. இதில் அசலானது வூஹானில் டிசம்பர் 2019-ல் உருவான ‘எல்’ என்ற கரோனா மாதிரி. இதன் உருமாற்றமான ‘எஸ்’ வைரஸ் மாதிரி 2020 தொடக்கத்தில் தோன்றியது. ஜனவரி மத்தியிலிருந்து ‘வி’, ‘ஜி’ ஆகிய மாறிய கரோனா வடிவங்கள் நமக்குத் தெரியவந்துள்ளது.
இன்றைய தேதியில் ‘ஜி’ என்ற கரோனா மாதிரிதான் பரவலாக தொற்றி வருகிறது, இதுதான் ஜிஆர் மற்ரும் ஜிஎச் என்ற துணைவகைகளாக மாற்றமடைந்துள்ளது.
ஜி யின் மாறிய வகையினமான ஜிஆர், ஜிஎச் ஆகிய கரோனா துணை வகை வைரஸ்தான் இதுவரை பரவலாகியுள்ளது, அதாவஹ்டு இந்த ஆய்வில் ஆய்வு செய்யப்பட்ட கரோனா வைரஸ் மரபணு வரிசைத் தொடர்களில் 74% ஜி-வகை, துணை வகைகள்தான்.
இவை 4 உருமாற்றங்களை தெரிவிக்கின்றன், இதில் 2 வகைகள் ஆர்.என்.ஏ. பாலிமெரேஸ் புரோட்டீன் வரிசைத் தொடரையும் வைரஸின் ஸ்பைக் புரோட்டீனையும் மாற்றக்கூடியது. இந்தத் தன்மைதான் வைரஸ் பரவலை தூண்டி விட்டுள்ளது.
6 முக்கிய கரோனா துணை வகைகள் போக ஆய்வாளர்கல் சில அடிக்கடி நிகழாத வேறு சில வைரஸ் உருமாற்றங்களையும் அடையாளப்படுத்தியுள்ளனர். ஆனால் இதைப்பற்றி இப்போதைக்குக் கவலைப்பட தேவையில்லை என்றாலும் கண்காணிப்பு தேவை என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT