Published : 22 Jun 2020 04:59 PM
Last Updated : 22 Jun 2020 04:59 PM
நாட்டில் கரோனா வைரஸ் வீச்சின் தாக்கமும் வெகு வீரியமாக பரவி வருவதையடுத்தும், வாக்சைன் தடுப்பு மருந்துகள் தொலைதூரஇலக்காக இருக்கும் போதும் இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு ரெம்டெசிவிர், ஃபேவிபிராவிர் ஆகியவற்றின் தயாரிப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
கிளென்மார்க் நிறுவனம் favipiravir என்ற மருந்தை FabiFlu என்ற வணிகப்பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இது மிக மிதமானது முதல் மிதமான கரோனா பாதிப்புகளுக்குக் கொடுக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. சிப்ளா மற்றும் ஹெடிரோ நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்தை முறையே சிப்ரெமி (Cipremi) மற்றும் கோவிஃபர் (Covifor) என்ற வணிகப்பெயர்களில் அறிமுகம் செய்ய இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு கழகம் அனுமதியளித்தது.
இது ஏதோ மாயமந்திர மருந்துகள் அல்ல என்று கூறியுள்ள மருத்துவ நிபுணர்கள் வைரஸ் சுமையைக் குறைக்க உதவும் என்று கூறியுள்ளனர்.
ரெம்டெசிவிர் மற்றும் ஃபேவிபிராவிர் ஆகிய இரண்டு மருந்துகள் உலகம் முழுதும் கரோனாவுக்கு பயன்படுத்த சோதனையில் இருந்து வருகின்றன.
இதில் ரெம்டெசிவிர் மருந்தின் பிராண்ட் பெயர்களான சிப்ரெமி, கோவிஃபர் ஆகியவை நரம்பு வழியாகச் செலுத்தும் மருந்துகளாகும். இது வைரல் தன்னைப் பிரதியெடுப்பதையும் இரட்டிப்பாவதையும் தடுக்கும் என்று கூறப்படுகிறது. ரெம்டெசிவிர் குணமாகும் நேரத்தை 15 நாட்களிலிருந்து 11 நாட்களாகக் குறைத்துள்ளது என்று அமெரிக்க ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹெடிரோ நிறுவனத்தின் ரெம்டெசிவிர் மருந்து குப்பி ஒன்றுக்கு ரூ.5000-6000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 நாட்கள் சிகிச்சை இதில் எடுத்துக் கொண்டால் ரூ30,000. சிப்ளா நிறுவனம் தன் விலையை இன்னமும் வெளியிடவில்லை. ரெம்டிசிவிர் மருந்து தீவிர சிகிச்சைக்கு அவசரநிலைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
நெடுநாளைய சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கும் லிவர் என்சைம்கள் அதிகம் இருப்பவர்களுக்கும், கருத்தரித்த பெண்கள், தாய்ப்பால் சுரக்கும் பெண்கள், 12 வயதுக்கு கீழுள்ளோர் ஆகியோருக்கு ரெம்டெசிவிர் அளிக்கப்படக் கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஊசிமருந்து மூலம் செலுத்தினால் இதனை முதல் நாளில் 200மிலி. கிராம் அளவுக்கே செலுத்த வேண்டும். பிறகு தினமும் 100மிலி கிராம் என்று 5 நாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.
Favipiravir-Fabiflu:
ஃபேவிபிராவிர் என்ற மருந்து ஜப்பானால் இன்ஃபுளுயென்சா காய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்பட்டதாகும். இதனை ஃபேபிப்ளூ என்ற பெயரில் இந்தியாவில் கிளென்மார்க் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படும் இந்த மருந்து அவரசரநிலைக்காக மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிகிச்சைக்கு முன்பாக நோயாளிக்கு இதைப் பற்றி அறிவுறுத்தி சம்மததுடன் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்து 18 கிளினிக்கல் சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதில் 2 ஆய்வுகளில் நம்பிக்கையான முடிவுகள் வெளியாகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 நாட்களில் வைரல் சுமையை குறைப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவரின் பரிந்துரைச் சீட்டின் படியே இது கிடைக்கும், விலை ஒரு மாத்திரைக்கு ரூ.103. முதல்நாளில் 1800 மிலி கிராம் இருமுறை கொடுக்க பரிந்துரைக்கப் பட்டுள்ளது. அதன் பிறகு நாளொன்றுக்கு இருமுறை 800 மிலி கிராம் 14 நாட்களுக்குக் கொடுக்க பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தவிர Tocilizumab என்ற முடக்குவாத (rheumatoid arthritis)சிகிச்சை மருந்தும் மும்பையில் அதிதீவிர கரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Itolizumab என்ற மருந்து பரந்துபட்ட அளவில் ஆட்டோ-இம்யூன் நோய்களுக்குக் கொடுக்கப்பட்டு வருவதும் கோவிட்-19 நோயாளிகளுக்கு டெல்லி, மும்பையில் சோதனை முறையில் அளிக்கப்பட்டு வருகின்றன.
குணமடைந்த கரோனா நோயாளிகளிடமிருந்து பிளாஸ்மாவை எடுத்து கோவிட்-19 நோயாளிகளுக்குச் செலுத்தும் முறையும் சோதிக்கப்பட்டு வருகிறது, டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கும் இது செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஆன்ட்டிபாடி உடலில் அதிகமானால் அது எதிர்ப்பதற்கான நோய்க்கிருமிகள் இல்லாமல் நம் உடல் நோய் எதிர்ப்புச் சக்திக் கூறுகளையே தவறுதலாகத் தாக்கும், நம் உடல் திசுக்களையேத் தாக்கும் ஆட்டோ-இம்யூன் நோய்களை உருவாக்கக் கூடும், உதாரணமாக தீவிர நரம்புத்தளர்ச்சி, முடக்கம் கூட ஏற்படலாம், ஆகவே இதில் துல்லியம் மிக முக்கியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT