Published : 05 May 2020 08:00 AM
Last Updated : 05 May 2020 08:00 AM
உலகை அழிவு பயத்துக்கு இட்டுச் சென்றுள்ள கரோனாவுக்கு சுமார் 100 வாக்சைன்கள் கிளினிக்கல் சோதனைகளுக்கு முந்தைய கட்டத்தில் உள்ளது, இதில் 2 வாக்சைன்கள் மனிதனில் சோதனை செய்யும் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கரோனாவுக்கு வாக்சைன்களே இல்லாமல் போகலாம், ஹெச்.ஐ.வி, டெங்கு போன்று இதுவும் மாறலாம் என்று நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
கரோனா விவகாரம், சுற்றுச்சூழல் விவகாரம் போலவே மீண்டும் மீண்டும் மக்கள் நம்பிக்கை தூண்டப்பட்டு பிறகு அடித்து நொறுக்கப்படுவதாகவே உள்ளது.
சிஎன்என் ஊடகம் தனது அறிக்கையில் கூறியது போல், “வாக்சைன் தயாரிக்கப்படாமலே போகும் மோசமான சந்தர்ப்பங்களும் சாத்தியமே”
ஹெச்.ஐ.வி. உலகைப் புரட்டிப் போடத் தொடங்கி 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் வாக்சைன் கண்டுபிடிக்க முடியவில்லை. சுமார் 32 மில்லியன் மரணங்கள் இதுவரை எய்ட்ஸ் நோய்க்கு ஏற்பட்டுள்ளன. ஆனால் வாக்சைன் இல்லை.
டெங்கு காய்ச்சலுக்கு வாக்சைன் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அது 9 வயது முதல் 45 வயதுடையோருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதுவும் அவர்களுக்கு முன்பாக டெங்கு இருந்தது உறுதி செய்யப்பட்டால்தான்.
அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் நோய் இல்லாதவர்களுக்கு இந்த டெங்கு வாக்சைன்கொடுத்தால் என்ன ஆகும் என்பதை இவ்வாறாக எச்சரித்தது: “டெங்கு வைரஸ் தொற்று முன்பு ஏற்படாதவர்களுக்கு வாக்சைன் கொடுத்தால் டெங்கு வைரஸ் தீவிரமாக அவர்களை பீடிக்கும் அபாயம் உண்டு” என்று எச்சரித்திருந்தது.
2017-ல் அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையில், “சில வைரஸ்களுக்கு வாக்சைன் கிடையாது. வாக்சைன் உருவாக்கி விடலாம் என்று நாம் ஒரு முற்று முழுதான முன் அனுமானங்களை வைத்துக் கொள்ள முடியாது அப்படியே வாக்சைன் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது அனைத்து பாதுகாப்பு, திறன் சோதனைகளில் வெற்றியடையும் என்றும் கூறிவிட முடியாது” என்று டாக்டர் டேவிட் நபாரோ எச்சரித்திருந்தார்.
அமெரிக்க தொற்று நோய் மற்றும் ஒவ்வாமை நோய் நிபுணர் டாக்டர் ஃபாஸி 12-18 மாதங்களில் வாக்சைன் உருவாகலாம் என்றார், ஆனால் இதற்கு மற்றொரு மருத்துவ நிபுணர் டாக்டர் பீட்டர் ஹோட்ஸ் என்பவர், “நாம் ஒருநாளும் ஓராண்டிலோ, 18 மாதங்களிலோ வாக்சைனை துரிதப்படுத்த முடியாது.” என்கிறார்.
ஆகவே கரோனா வைரஸ் எனும் கோவிட்-19 என்பது நம்முடன் இருக்கவே செய்யும். லாக்-டவுன் பொருளாதார ரீதியாக நீட்டிக்க உகந்ததல்ல.
தற்போது ஆக்ஸ்போர்ட் வாக்சைன் குழு மற்றும் ஆக்ஸ்போர்ட் ஜென்னர் இன்ஸ்டிட்யூட் வாக்சைன் மாதிரி ஒன்றை ஆய்வு செய்து வருகிறது. எதிர்கால வாக்சைனாகக் கருதப்படும் இந்த ChAdOx1 nCoV-19 என்பது அடினோ வைரஸ் வாக்சைன் மற்றும் சார்ஸ் கரோனா வைரஸ்-19 புரோட்டீன் அடிப்படையிலானது.
உலகச் சுகாதார அமைப்பு, 102 வாக்சைன்களில் 8 முன்னிலை வாக்சைன்கள் மனித பரிசோதனைக் கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கிறது.
ஆனாலும் வாக்சைன்கள் குறித்து யாரும் இன்னும் 100% உறுதியாக எதையும் கூற முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT