Last Updated : 02 Apr, 2020 04:09 PM

 

Published : 02 Apr 2020 04:09 PM
Last Updated : 02 Apr 2020 04:09 PM

காசநோய்த் தடுப்பு பிசிஜி வாக்சைன் கரோனா வைரசின் பாதிப்புத் தீவிரத்தைக் குறைக்கிறது- அமெரிக்க விஞ்ஞானிகள் கருத்து, இந்திய விஞ்ஞானிகள் எச்சரிக்கையுடன் நம்பிக்கை

இந்தியாவில் காசநோயைத் தடுப்பதற்காக லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பிறந்தவுடன் செலுத்தப்படும் ‘தி பாசிலஸ் கால்மெட்-குயெரின்’ என்ற பிசிஜி வாக்சைன் தீவிர கரோனா வைரஸுக்கு எதிராக ‘கேம் சேஞ்சர்’ என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பிசிஜி குழந்தைகளுக்கான தடுப்பு வாக்சைனின் செயல்பாடுகள் கோவிட்-19 தீவிரத்துடன் இணைத்துப் பார்க்கப்படுகிறது. இன்னும் வெளியிடப்படாத இந்த ஆய்வை நடத்திய நியூயார் தொழில்நுட்பக் கழகம் இத்தாலி, அமெரிக்க உதாரணங்களை காட்டியுள்ளது.

அதாவது பிசிஜி வாக்சைன்கள் இப்போது பாதிக்கப்பட்ட கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கானதல்ல பிசிஜி வாக்சைன் செலுத்துவதை ஒரு தேசியக் கொள்கையாக வகுத்தெடுத்து குழந்தைகளுக்கு காசநோயைத் தடுக்க கொடுத்த நாடுகளில் கரோனா தீவிரம் அவ்வளவாக இல்லை என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

இந்த ஆய்வில் இத்தாலி, ஹாலந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பிசிஜி வாக்சைன்களை குழந்தைகளுக்குப் போடுவது ஒரு தேசியக் கொள்கையாக கடைபிடிகவில்லை எனவே இந்த நாடுகளில் இதன் தீவிரம் தாக்கம் அதிகமாக இருக்கிறது, மாறாக பிசிஜி வாக்சைன்களை குழந்தைகளுக்கு செலுத்துவது குறித்த தேசிய அளவிலான கொள்கைகள் கொண்ட நாடுகளில் கொரோனா தீவிரம் அதிகமில்லை என்று நியூயார்க் தொழில்நுட்ப கழகத்தின் பயோ மெடிக்கல் உதவி பேராசிரியர் கொன்சாலோ ஒடாஸு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கரோனா தொற்று பரவியவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடக்க மரண எண்ணிக்கை 5000த்தை கடந்துள்ளது. இத்தாலியில் 12,000 பேர் மரணமடைய மேலும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்தான் பிசிஜி வாக்சைன்களை தேசியக் கொள்கையாக வடிவமைக்காத நாடுகளில் கோவிட்-19 தீவிரத்தாக்கம் தலைவிரித்தாடுகிறது என்று நியூயார்க் தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் பிசிஜி வாக்சைன்களை குழந்தைகளுக்கு செலுத்துவது என்பது ஒரு தேசியக் கொள்கையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிக காசநோய் பாதிப்பு நாடாக இந்தியா இருந்த போது 1948-ல் பிசிஜி நோய்த்தடுப்பு பெரிய அளவில் குழந்தைகளுக்கு அளிக்கப்படுவது அறிமுகம் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்திய மருத்துவ வல்லுநர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர், ஆனால் இது குறித்து இவ்வளவு விரைவில் எதுவும் கூறுவதற்கில்லை என்கின்றனர். பிசிஜி வாக்சைன் கரோனாவை தீர்க்கிறது என்று பொருளல்ல ஆனால் குழந்தைப் பருவத்தில் பிசிஜி வாக்சைன் கொடுக்கப்பட்டவர்களுக்கு இதன் தீவிரம் குறைவாக இருக்கிறது என்று பொருள் என்று மோனிகா குலாட்டி என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் டிபி நோய்த்தடுப்பு வாக்சைன் கரோனா தீவிரத்தை எப்படி பாதிக்கிற்து என்பதை ஆய்வு பூர்வமாக கண்டுபிடிக்க வேண்டிய தேவையுள்ளது என்று இந்திய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த பிசிஜி வாக்சைன் திட்டத்தை கொள்கையாகக் கடைபிடித்திருந்தால் வயதானவர்கள் இவ்வளவு பேர் கரோனாவுக்குப் பலியாகியிருக்க மாட்டார்கள் என்கின்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள்.

1984-ல் தான் ஈரானில் பிசிஜி வாக்சைன் ஒரு கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தியதில் 10 லட்சம் பேர்க்கு 19.7% மரணம் என்ற விகிதம் இருந்தது. மாறாக பிசிஜி வாக்சைன் கொள்கையை 1947-லேயே கடைபிடித்த ஜப்பானில் 0.28% தான் மரண விகிதம் என்கின்றன புள்ளி விவரங்கள்.

பிரேசில் 1920களிலேயே பிசிஜி வாக்சைன் திட்டத்தை தொடங்கியதால் அங்கு 0.0573% தான் மரண விகிதம். 1963 முதல் 2010 வரை சில பணக்கார ஐரோப்பிய நாடுகள் பிசிஜி வாக்சைன் செலுத்தும் திட்டத்தை கைவிட்டன. காரணம் இந்த நாடுகளில் டிபி நோயாளிகள் குறைந்தனர், அல்லது தேவைப்படும் ரிஸ்க் குழுக்களுக்கு மட்டும் வாக்சைன் அளிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் காசநோயைத் தடுக்கும் ஆற்றலுடைய பிசிஜி வாக்சைனை ஒரு தேசியக் கொள்கையாக எடுத்து லட்சக்கணக்கானோருக்கு அளித்த நாடுகளில் கரோனா பாதிப்பு, தீவிரம் குறைவாக இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர், ஆனால் இது ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டும் என்று இந்திய விஞ்ஞானிகள் கருதுகின்றனர், இப்போதைக்கு சமூகவிலக்கல், தனிமைப்படுத்தல், இனம் கண்டு டெஸ்ட் செய்தல், சிகிச்சையளித்தலே தீர்வு என்கின்றனர் இந்திய ஆய்வுத் தரப்பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x