Published : 26 Mar 2020 07:56 AM
Last Updated : 26 Mar 2020 07:56 AM
கரோனா வைரஸுக்கு எதிரான போரில் பல நாடுகளும் லாக்-டவுன் என்று முழு அடைப்பு உத்தரவை அமல்படுத்த பிரதமர் மோடி அன்று 21 நாட்கள் முழு அடைப்பு என்று கூறி மக்கள் வெளியே வர வேண்டாம் உங்களை கையெடுத்துக் கும்பிடுகிறேன் என்று உருக்கமாக வேண்டுகோளும் விடுத்தார்.
ஏன் 21 நாட்கள் அடைப்பு என்பதற்கான விஞ்ஞானபூர்வ காரணங்கள் இருக்கின்றன. அதாவது செறிவான அறிவியல் தரவுகள் 21 நாட்கள் லாக்-டவுனை பிரேரணை செய்கின்றன.
எபோலா வைரஸ் பரவிய நேரத்திலேயே இது விவாதிக்கப்பட்டு 21 நாட்கள் தனிமைப்படுத்துவது, சமூக விலகல் பயனளிக்கும் என்று விவாதிக்கப்பட்டது, அதாவது மனித உடலில் ஒட்டுண்ணியாக இருக்கும் வைரஸ் 21 நாட்கள் வரைதான் தாக்குப் பிடிக்க முடியும். அதாவது வைரஸ் தாக்கம் உருவெடுத்த தரவுகளின் அடிப்படைகளிலிருந்து விளக்கம் அளித்து 21 நாட்கள் தனிமைப்படுத்தல், சமூக விலகல் ஆகியவை சுகாதார நிபுணர்களால் பிரேரணை செய்யப்பட்டன.
“தொற்று நோயியல் (epidemiology)முறைகளின் படி நாங்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிவுக்கு வந்தோம். ஆனால் மிச்சம் மீதியுள்ள தொற்றும் அழிய மேலும் 7 நாட்கள் கூட்டப்பட்டு 21 நாட்கள் என்ற முடிவுக்கு வந்தோம்.” என்று தமிழ்நாடு பொதுச்சுகாதார இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்தார்.
எனவே வைரஸ் நுழையும் தினத்திலிருந்து நோய் அறிகுறிகள் நோய்த் தொற்று காலம் “இடைப்பட்ட அடைகாத்தல் காலம்” (median incubation period) என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்தக் காலக்கட்டம்தான் முக்கியமானது.
இதுதான் கரோனா என்றல்ல எந்த ஒரு வைரஸ் தொற்றையும் தடுக்கும் சரியான வழி என்றும் இதுதான் தனிநபர்களிடமிருந்து சமுதாய தொற்றாக மாறாமல் இருக்க சரியான வழி என்றும் சென்னையில் உள்ள பொதுச்சுகாதார நிபுணர் கே.குகநாதன் தெரிவிக்கிறார். இவ்வாறாகப் பரவும் தொற்று வைரஸ்களுக்கு, நோய்களுக்கு இதைவிட சிறந்த முறை வேறு எதுவும் இல்லை.
மேலும் டாக்டர் குழந்தைசாமி தெரிவிக்கும் போது, “மேலும் இப்படிப்பட்ட தனிமைப்படுத்தல், சமூக விலகல் முறைகள் ஆகியவற்றினால் மக்களிடம் நாம் நோயின் தீவிரம் எப்படி என்று விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். இதன் மூலம் பொதுமக்களிடத்தில் ஒரு நம்பிக்கையான கருத்தை உருவாக்க முடியும். இந்தக் காலக்கட்டத்தில் அனைத்து கட்டிடங்கள், பொது இடங்களில் கிருமி நாசினியைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய முடியும். மருத்துவமனைகள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராக முடியும்.
“நாம் காலவரையறையின்றி வீட்டில் இருக்க முடியாது, ஆனால் நம் தியாகம் பயனுள்ள வகையில் இருப்பதை உறுதி செய்ய முடியும். ஆகவே மக்கள் 21 நாட்கள் ஊரடங்கு, சமூகவிலகலை கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும். வாழ்க்கையே இதை நம்பித்தான் இருக்கிறது என்று இதனைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆம் வாழ்க்கை இதை நம்பித்தான் இருக்கிறது” என்று டாக்டர் குழந்தை சாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
-தி இந்து (ஆங்கிலம்)
தமிழில் சுருக்கமாக இரா.முத்துக்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT