Published : 22 Mar 2020 08:21 AM
Last Updated : 22 Mar 2020 08:21 AM
கடந்த 2002-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரக நாட்-வெஸ்ட் சீரிஸ் ஒருநாள் தொடரில் இந்திய வீரர்கள் முகமது கைப்-யுவராஜ் கூட்டணி நிலைத்து நின்று போராடியது போல், கரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வெல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
உலகை அச்சறுத்தி வரும் ஒரே வார்த்தையாக கரோனா வைரஸ் மாறிவிட்டது. சீனாவின் வுஹான் நகரில் உருவான கரோனா வைரஸ் 165 மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத் வருகிறது. கரோனா வைரஸால் இதுவரை உலகளவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர், 2.84 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸின் பாதிப்புக்கு இந்தியாவும் தப்பவில்லை. இதுவரை கரோனா வைரஸால் இந்தியாவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், 296 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர், ஆயிரக்கணக்கானோர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
கரோனா வைரஸைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைளை எடுத்து வருகிறது, மக்கள் கூட்டத்தைக் குறைக்கும் வகையில் பள்ளி,கல்லூரி, பல்கலைக்கங்களுக்கு இம்மாதம் 31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது,
திரையரங்குகள், அருங்காட்சியகங்கள் , பூங்காக்கள், உள்ளிட்டவையும் இந்த மாதம் 31-ம்தேதிவரை மூடப்பட்டன.
22-ம் தேதிமுதல் ஒரு வாரத்துக்கு சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து பயணிகள் இந்தியாவுக்குள் வரவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுபோன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து வந்த இந்தியர்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளையும மத்திய அரசு செய்தள்ளது செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே நாடுமுழுவதும் மக்கள் கடைபிடிக்கும் ஜனதா ஊரடங்கை பிரதமர் மோடி 22ம் தேதி (நாளை) அறிவித்தார். அதன்படி, மக்கள் அனைவரும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டுக்கள் தங்க இருக்கும்படி பிரதமர் மோடி அறிவுறுத்தினார். முதியோர், குழந்தைகள் தேவையின்றி வெளியே வர வேண்டாம், சமூக இடைவெளியே பின்பற்ற வேண்டும் என்று மக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
பிரதமர் மோடியின் கருத்தை ட்விட்டரில் பகிர்ந்து மக்கள் அனைவரும் 22-ம் தேதி ஜனதா ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும், வீட்டுக்குள் இருந்து கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முகமது கைப்புக்கு ட்விட்டரில் பதில் அளித்த பிரதமர் மோடி, “ மற்றொரு வலுவான பார்ட்னர்ஷிப் அமைக்க சரியான நேரம்” எனத் தெரிவித்தார்.
மற்றொரு ட்விட்டில் “ இரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள்(யுவராஜ்சிங்,முகமது கைப்) அமைத்த பார்ட்னர்ஷிப் என்றென்றும் மறக்க முடியாது. இப்போது அதேபோன்று மற்றொரு பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய தருணம். அனைத்து இந்தியர்களும் ஒன்றாக கூட்டுசேர்ந்து, கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வெல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்
2002-ம் ஆண்டு ஜூலை மாதம் லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக நடந்த நாட்வெஸ்ட் ஒருநாள் தொடரில் தோல்வியில் பிடியில் இருந்த இந்திய அணியிைய முகமது கைப், யுவராஜ் சிங் கூட்டணி மீட்டு வெற்றி பெற வைப்பார்கள் இருவரும் சேர்ந்து 121 ரன்கள் பாட்னர்ஷி்ப் அமைத்தார்கள். கங்குலி தலைமையில் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது. இதைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT